செய்தி அறிக்கை

அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றக் கூடாதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

On madurai high court

தமிழகம் முழுவதிலும் இருக்கிற அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் வைத்துள்ள கொடிக் கம்பங்களை அகற்றிட உத்தரவிட்ட தனி நீதிபதி மற்றும் அதை உறுதி செய்த இரண்டு நீதிபதிகள் உத்தரவிலிருந்து மாறுபட்டு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் மு.ராஜசேகர் அடங்கிய அமர்வு கட்சி கொடிக்கம்பங்கள் குறித்த வழக்கினை இரண்டிற்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து இன்று உத்தரவிட்டனர்.

மேலும், உத்தரவில் சம்பந்தபட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல் பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவு இயற்கை நீதிக்கு புறம்பானது என்றும், ஏற்கனவே அனுமதி வாங்கி வைக்கப்பட்ட கொடி கம்பங்களையும் அகற்ற வேண்டுமென பிறப்பித்த உத்தரவு சட்டத்திற்கு உகந்ததாக இல்லை எனவும், தனியார் இடங்களில் கட்சி கொடி கம்பங்கள் அகற்ற வேண்டுமென போடப்பட்ட உத்தரவு ஏற்கத்தக்கதுதானா என்பதனை இரண்டிற்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

Leave a Reply