ஒன்றிய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில், போராடும் மக்கள்மீது கொடூரமான அடக்குமுறையை சி.பி.ஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்டிக்கிறது. இந்த வன்முறைத் தாக்குதல்க நால்வர் பலியாகியுள்ளனர் பலர் காயமடைந்துள்ளார்கள்.
லடாக்கு மக்கள் முழுமையான அதிகாரத்துடன் கூடிய சட்டமன்றம் கொண்ட மாநில அந்தஸ்தையும், இந்திய அரசியலமைப்பின் ஆறாம் அட்டவணையின் கீழ் அந்தப் பகுதியை கொண்டு வருவதையும் கடந்த ஆறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், வடமேற்கு மாநிலங்களின் மக்களுக்கு கிடைக்கும் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பும் உரிமைகளும் லடாக் பகுதி மக்களுக்கும் கிடைக்கும். ஆனால் பாஜக தலைமையிலான அரசு இந்த கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டே வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக பலமுறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கூட அரசாங்கம் இக்கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால், தங்கள் உரிமைக்கான நியாயமான எதிர்பார்ப்புகள் புறக்கணிக்கப்பட்ட ஏமாற்றத்தில், லே அபெக்ஸ் பாடி (LAB) உள்ளிட்ட மக்களின் அமைப்புகள் 15 நாட்கள் நீடித்த அமைதியான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கின. ஆனால் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமல், ஒன்றிய அரசு உண்ணாவிரதப் போராளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்தது. இதுவே பரவலான மக்களின் எதிர்ப்புக்கும் கலக்கத்துக்கும் வழிவகுத்தது.
வழக்கமாக அமைதியான இப்பகுதியில் வன்முறைக்கான சூழலைத் தாமே உருவாக்கிய பின்னும், அதற்குப் பொறுப்பாக போராட்டக்காரர்களையே குற்றம் சாட்டுகிறது ஒன்றிய அரசு. உடனடியாக அடக்குமுறைகளை தனது நிறுத்தி, இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சிபிஐ(எம்) ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காவல் துறையின் அடக்குமுறையில் காயமடைந்தவர்களுக்கும் நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோருகிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > தீர்மானங்கள் > மத்தியக் குழு > லடாக்கில் நிகழ்த்தப்படும் கடுமையான அடக்குமுறைகளுக்கு சிபிஐ(எம்) கண்டனம்
லடாக்கில் நிகழ்த்தப்படும் கடுமையான அடக்குமுறைகளுக்கு சிபிஐ(எம்) கண்டனம்
25 September 2025186 views
posted on







