செய்தி அறிக்கை

காசா இனப்படுகொலைகளைக் கண்டித்தும், பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் – 8.10.2025 அன்று சென்னையில் சிபிஐ(எம்) தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்!

Palastin statenment



முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு!

காசா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்தும், இனவெறிப்பிடித்த இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம் தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் சென்னையில் வருகின்ற 8.10.2025 அன்று காலை 10.00 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மாண்புமிகு மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் திருமிகு கி. வீரமணி, சிபிஐ (எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
உ.வாசுகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருமிகு கு.செல்வபெருந்தகை, மதிமுக பொது செயலாளர் திருமிகு வைகோ, சிபிஐ மாநில செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன், விசிக நிறுவனத் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திருமிகு கே.ஏ.எம். முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமிகு எம்.ஹெச். ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திருமிகு தி. வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே. நித்தியானந்தன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநில செயலாளர் தோழர் பழ. ஆசைத்தம்பி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் திருமிகு தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர். சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர்கள் தோழர்கள் எம். ராமகிருஷ்ணன், இரா. வேல்முருகன், ஜி. செல்வா, எஸ். கோபால், பி.எஸ். பாரதி அண்ணா, கே. நேரு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

காசா மீது இனப்படுகொலைகளை அரங்கேற்றி வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பகுதி பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனக் குரலெழுப்பிட முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்