செய்தி அறிக்கை

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்!!

Cpim WBS copy

பாவேந்தர் பாரதிதாசன் கவிமரபை சேர்ந்த முற்போக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்

மரபுக்கவிதை, ஹைக்கூ என கவிதையின் அனைத்து வடிவங்களிலும் மிளிர்ந்தவர். இவருடைய கவியரங்க கவிதைகளில் அர்த்த செறிவுடன் அனல் தெறிக்கும். பொதுவுடமைக் கருத்துக்களை தனது கவிதைகளில் பரப்பிய அவர் , ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், சாதி, மதவெறி, மூடநம்பிக்கை சிந்தனைகளை சாடுபவராகவும் விளங்கினார். வணக்கம் வள்ளுவ கவிதை நூலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்றவர். சிலி நாட்டு புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா மீது பெரும்பற்று கொண்ட கவிஞர் ஈரோடு தமிழன்பன் தனது கவிதைகளில் சமரசமற்ற ஏகாதிபத்திய உணர்வை வெளிப்படுத்தியவர். அவருடைய மறைவு முற்போக்கு கலை, இலக்கிய உலகிற்கு பேரிழப்பு.

அவருடைய மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

(பெ.சண்முகம்)
மாநில செயலாளர்