சாம்சங் நிறுவனத்தில் சங்கம் அமைத்த காரணத்திற்காக முன்னணியில் நின்ற சங்க பொதுச்செயலாளர் உள்ளிட்டு 27 நிர்வாகிகளை சாம்சங் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்ததை ரத்து செய்து அவர்களை மீண்டும் பணிக்கு எடுக்கவும், சாம்சங் நிறுவனத்திற்கு உதிரிபாகம் தயாரிக்கும் எஸ்.எஸ். எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையிலும் சங்கம் அமைத்ததற்காக நிரந்தர தொழிலாளர்கள் 93 பேரை நிறுவனம் டிஸ்மிஸ் செய்தது. இதை ரத்து செய்து மீண்டும் வேலை வழங்கிடவும் கடந்த 8 மாத காலமாக தொழிலாளர்துறை மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் ஆகியோரிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பின்னணியில், சாம்சங் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் தோழர் இ. முத்துக்குமார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம் அவர்களை இன்று நேரில் சந்தித்து பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும், வேதனைகளையும் முறையிட்டனர்.
அப்போது, சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண தமிழக முதலமைச்சரிடம் எடுத்துரைத்து தீர்வும், நிவாரணமும் கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முயற்சி எடுப்பதாக மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம் தொழிலாளர்களிடம் தெரிவித்தார்.
சாம்சங் தொழிலாளர்கள் சந்திப்பு புகைப்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சியில் செய்தி வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
(வெ. ராஜசேகரன்)
அலுவலக செயலாளர்







