செய்தி அறிக்கை

தென்காசி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!! 7 பேர் உயிரிழப்பு! பலர் படுகாயம்! சிபிஐ(எம்) வேதனை!

Cpim WBS copy

தென்காசி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததும், பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதும் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், குடும்பத்தினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தனியார் பேருந்துகள் வேகமாக வந்ததன் விளைவாகவே இந்த கோர விபத்து ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, தனியார் பேருந்துகள் அரசின் விதிமுறைகளை மீறாமல் கறாராக கடைபிடிப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.இருப்பினும், கூடுதலாக நிவாரணம் அளித்திடவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

(பெ. சண்முகம்)

மாநில செயலாளர்