அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்திடுக! தேர்தல் ஆணையத்திற்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

Cpim WBS copy

நாடு முழுவதும் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision of  Electoral Rolls – SIR) மேற்கொள் ளப்பட்டு வரும் விதம் குறித்து, சிபிஐ(எம்) மீண்டும் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது.

குழப்பமான செயல்பாடுகளால் குடிமக்கள் பாதிப்பு வழக்கமான, வெளிப்படையான மற்றும் குடிமக்கள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பணியாக இருக்க வேண்டிய இந்தத்  திருத்தப் பணி, தற்போது குழப்பமான மற்றும் தன்னிச்சையான ஒரு  செயல்பாடாக மாறியுள்ளது. இது  வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையையும், இப்பணியை மேற்  கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் ஊழியர்களின் பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறது. இந்தத் திருத்தப் பணி முழுவதுமாகவே அவசர கதியில், மோசமான திட்டமிடலுடன் நடத்தப்படுகிறது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (Booth Level Officers – BLOs) வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பை மேற்கொள்வதற்கு சாத்தியமற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  பெருமளவு வாக்காளர்கள் விடுபடும் ஆபத்து! இந்த அவசரம் காரணமாக, பல  இடங்களில் பி.எல்.ஓ. ஊழியர்கள் குறிப்பிட்ட கட்சி அலுவலகங்களில் முகாமிட்டு, வாக்காளர்களை அங்கு வருமாறு அழைப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இவை  அனைத்தும் தவிர்க்க முடியாமல்,  வாக்காளர்கள் பெருமளவில் விடுபடுவதற்கும், பிழைகள் ஏற்படுவதற்கும் வழிவகுத்துள்ளது. வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மீது ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அழுத்தம் ஏற்கெனவே பல  உயிர்களைப் பறித்துள்ளது. அவர்  கள் போதுமான ஓய்வு அல்லது பாதுகாப்பு இல்லாமல், கடுமையான  பணிச்சுமையின் கீழ் பணிபுரிகின்றனர். இவை தற்செயலான உயிரிழப்புகள் அல்ல. பொறுப்பற்ற மற்றும் மனிதாபிமானமற்ற நிர்வாக  செயல்முறையின் நேரடி விளைவுகளாகும்.

சொந்த மென்பொருளைப் பயன்படுத்தாதது ஏன்?  தேர்தல் ஆணையம் அதற்குச் சொந்தமான வாக்காளர் கண்டறிதல் மென்பொருளைப் பயன்படுத்த வில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. துல்லியத்தன்மையை உறுதி  செய்வதற்கும், கைமுறைப் பணிச் சுமையைக் குறைப்பதற்கும் என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த மென்பொருளை தேர்தல் ஆணையம் பயன்படுத்தவில்லை என்பது, தற்போதைய வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக் கம் மீது கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும், படிவங்களை பதிவேற்ற விரும்பும் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் மற்றும்  சாதாரண வாக்காளர்கள் ஆகியோர் இணைய இணைப்பு, நிலையற்ற சேவையகங்கள் (servers) மற்றும் தொடர்ச்சியான தொழில்  நுட்ப தோல்விகளை எதிர்கொள்கின்றனர் என்பது, கவலைகளை அதிகரிக்கிறது. பலருக்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும், ஒரு எளிய படிவத்தை பதிவேற்றுவது கூட வேதனையான அனுபவமாக மாறியுள்ளது.

இது வாக்காளர் சேர்க்கைக்கு  புதிய தடைகளை திறம்பட உருவாக்கி இருக்கிறது. வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் எனவே, குறைபாடுகள் நிறைந்த  வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தச் செயல்முறையை உடனடியாக நிறுத்தி, பெருமளவிலான மக்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பதைத் தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோரிக்கை விடுக்கிறது.