Tag Archives: செந்தொண்டர்

24 Th Viluppuram
24 வது மாநில மாநாடு

செம்மயமாக மாறும் விழுப்புரம்; மக்கள் போராளிகளை வரவேற்கத் தயார்!

1.5 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக சென்று பிரச்சாரம்  - உழைக்கும் மக்களின் கருத்தரங்குகள் - விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் - கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய வாகனப் பிரச்சாரம் - தெருமுனைக் கூட்டங்கள் என மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி மாநாடே காட்சியாக மாறியுள்ளது. கலை நிகழ்ச்சிகளின் தாக்கம் “சமூக ஒடுக்குமுறை தகரட்டும், சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்!” என்ற முழக்கத்துடன் புதுச்சேரி சப்தர் ஹஷ்மி, கல்லை குறிஞ்சி, சேலம் மாங்குயில் கலைக் குழுக்கள் களமிறங்கின. 12 இடைக்கமிட்டிகள் மூலம் தினமும் 10 மையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய கலைப் பிரச்சாரம் மக்கள் மனங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.