தமிழ்நாட்டின் பெருமிதம் மார்க்சிஸ்ட் கட்சி !
கீழத்தஞ்சையில் நிலவுரிமைப் போராட்டம் மட்டுமல்ல; தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்கவும் செங்கொடி இயக்கமே முன்னணியில் நின்றது. அதற்கு எதிரான அடக்குமுறைகளின் ஒரு பகுதியாகத்தான் கீழ்வெண்மணியில் , 44 தலித் உயிர்களை, நம் செங்கொடி இயக்க கண்மணிகளை, நிலச்சுவான்தார்கள் உயிரோடு எரித்துக் கொன்றனர். இந்த கோரச்சம்பவத்திற்கு பிறகு கணபதியா பிள்ளை தலைமையில் ஆணையம்அமைக்கப்பட்டது. இடதுசாரிக்கட்சிகள் மேற்கொண்ட முன்னெடுப்பால் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிச்சட்டம் கொண்டு வரப்பட்டது.