Tag Archives: woman

விழுப்புரத்தில் நடக்கவுள்ள கட்சி மாநில மாநாட்டுக்கான சுவர் விளம்பரங்கள்
24 வது மாநில மாநாடு

பெண்ணுரிமை காப்பதில் முன்னத்தி ஏர் சிபிஐ(எம்)…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை 1920இல் தாஷ்கண்ட் நகரத்தில் அமைக்கப்பட்ட போது அதில் இடம்பெற்ற ஏழு பேரில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் ஆட்சி செய்த மேற்கு வங்கம், கேரளம், திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலின சமத்துவத்துக்குப் பாதை போடப்பட்டது. மேற்கு வங்கத்தில் கூட்டுப்பட்டா, உள்ளாட்சிகளில் கூடுதல் பிரதிநிதித்துவம், கேரளாவில் பெண்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த குடும்பஸ்ரீ போன்ற திட்டங்கள், அடிமட்டத் திட்டமிடல், கடை ஊழியர்கள் உட்காரும் உரிமைச் சட்டம், திரிபுராவில் பழங்குடிப் பெண் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை சாத்தியமாகியுள்ளன. திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீதிபதி ஹேமா கமிட்டி மலையாளத் திரைத்துறையில் உருவாக்கப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட முயற்சி எடுக்கப்பட்டதில்லை. 33% இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க ஊசலாட்டமற்ற போராட்டத்தை சிபிஎம் நடத்தியது.