மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரம் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான கூட்டம் கண்டாச்சிபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டச் செயலாளர் எஸ். கணபதி தலைமை வகித்தார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றினார். கூட்டத்தில், மாநில மாநாட்டிற்கு முதற்கட்டமாக கண்டாச்சிபுரம் வட்டக் குழு சார்பில் ரூ.70 ஆயிரம் வாசுகி யிடம் வழங்கப்பட்டது. மாவட்டச் செய லாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.வேல்மாறன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.தாண்டவராயன், எம்.முத்துவேல், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் வி.உதயகுமார், வட்டக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செஞ்சி
அதேபோல், செஞ்சி வட்டக்குழு சார்பில் நடைபெற்ற தயாரிப்பு கூட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட துணைத் தலைவர் கே. மாதவன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றி னார்.
ஓராண்டு சேமிப்பு பணம்
செஞ்சி வட்டச் செயலாளர் ஆல்பட் வேளாங்கண்ணி, மைக்கேல் எலிசபெத் ஷீபாவின் 9 வயது மகன் ஆ.அனிஷ் டி புக்கோக்கு, கடந்த ஓராண்டாக உண்டியலில் சேமித்த பணம் ஆயிரம் ரூபாயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில மாநாட்டு நிதியாக மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம், தனது பிறந்த நாளான நவ.11 அன்று வழங்கி னார். சிபிஎம் மாநில மாநாட்டிற்கு நிதி வழங்கிய ஆ.அனிஷ் டி புக்கோக்கு, செஞ்சி ஸ்ரீதரணி தண்டபாணி உயர் நிலைப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிகழ்வில் கட்சியின் விழுப்பு ரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.குமார், எஸ்.வேல்மாறன், வட்டச் செயலாளர் ஆல்பட் வேளாங் கண்ணி உட்பட பலர் பங்கேற்றனர்.