24 வது மாநில மாநாடு

சிபிஎம் 24வது மாநில மாநாடு : சிவக்கிறது விழுப்புரம்!

விழுப்புரத்தில் நடக்கவுள்ள கட்சி மாநில மாநாட்டுக்கான சுவர் விளம்பரங்கள்

பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை யான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் கட்டமைப்பில் மாநாடு கள் என்பவை வெறும் கூட்டங்கள் அல்ல – அவை மக்கள் விடுதலைக் கான உலைக்களங்கள்! மூன்றாண்டு களுக்கு ஒருமுறை, அடித்தள மட்டத் த்திலிருந்து தேசிய அளவு வரை நடை பெறும் இந்த மாநாடுகள், வரலாற்றின் போக்கை மாற்றியமைக்கும் திறன் கொண்டவை.

போராட்டப் பாதையில் புதிய திசை

ஒவ்வொரு மாநாட்டிலும் கடந்த காலப் போராட்டங்களின் பாடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, வரவிருக்கும் போராட்டங்களுக்கான உத்திகள் வகுக்கப்படுகின்றன. முதலாளித் துவக் கட்சிகளின் தலைவர் வணக்க மாநாடுகளிலிருந்து முற்றிலும் மாறு பட்டு, இங்கு ஒவ்வொரு தொழிலாளி யின் குரலும்செவிசாய்கப்படுகிறது, ஒவ்வொருவிவசாயியின் கருத்தும் பரிசீலிக்கப்படுகிறது.

புயலையும் வெல்லும் சிவப்பு வீரர்கள்

2025 ஜனவரி 3, 4, 5 ஆகிய மூன்று நாட்கள் விழுப்புரம் மண் மாநாட்டுக் களமாக மாறுகிறது. இயற்கையின் சவால்களை எதிர்கொண்டு, பெஞ்சால் புயலின் தாக்கத்திலிருந்து மீண்டெ ழுந்து,மக்கள்  நலனுக்கான போராட்டப் பாதையில் புதிய அத்தியாயம் எழுதப் படுகிறது.

மாநில செயலாளரின் போர்முழக்கம்

“சாதி, மத வேறுபாடுகளால் சிதறடிக்க ப்பட்ட மக்களை ஒன்றிணைத்து, வர்க்கப் போராட்டத்தின் பாதையில் அணிதிரட்ட வேண்டியது நமது தலையாய கடமை”  என மாநில செயலாளர்  கே. பாலகிருஷ் ணன், மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டத்தில் அறைகூவல் விடுத்தார். அதை செயல்படுத்தும் வித மாக வடமாவட்டங்களில் இந்த விழிப்பு ணர்வை ஊட்டுவதற்கான திட்டவட்ட மான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

இயற்கையின் சவால்கள்

பெஞ்சால் புயலின் கொடூரத் தாக்கம்  விழுப்புரம் மக்களை பெரிதும் பாதித்துள் ளது. ஆனால் போராட்ட வீரர்களின் உறுதியை அது குறைக்கவில்லை. மாறாக, மக்களுடன் இணைந்து நின்று, மீட்புப் பணிகளில் முன்னின்று செயல்ப டும் கட்சித் தோழர்களின் அர்ப்பணிப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.

செந்தழல் பரப்பும் பிரச்சார இயக்கம்

விழுப்புரம் மண்ணில் முதன்முறையாக நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டின் செய்தி, ஏழை எளிய மக்களின் குடிசை முதல் கூரை வீடுகள் வரை எட்ட வேண்டும் என்ற உறுதியுடன் பிரச்சார இயக்கம் தீவிரமடைந்துள்ளது.பல்லாயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் விடுதலையின் விதைகளாக தூவப்பட்டுள்ளது.

நூறு களங்களில் தெருமுனைக் கூட்டங்கள்

“தெருவெல்லாம் சிவப்புக் கொடி! தெருமுனையெல்லாம் போராட்டக் குரல்!” என்ற முழக்கத்துடன் நூறு மையங்களில் தெருமுனைக்  கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தெருமுனையும் மக்கள் விடுதலைக்கான கருத்தரங்கமாக மாறுகிறது.

செம்படையின் பயிற்சி முகாம்கள்

விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதி களில் செம்படை வீரர்களுக்கான பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின் றன. ஒழுங்கமைந்த அணிவகுப்பு, ஒருங்கிணைந்த முழக்கங்கள், சீரான அணிநடை என அனைத்தி லும் தோழர்கள் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.

மாநாட்டு அரங்கின் தயார்நிலை

மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் இம்மாபெரும் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக திட்ட மிடப்பட்டுள்ளன:

– பிரதிநிதிகளுக்கான தங்குமிட வசதிகள்
– மாநாட்டு அமர்வுகளுக்கான விரிவான ஏற்பாடுகள்
– விவாதங்களுக்கான நவீன ஒலிபெருக்கி அமைப்புகள்
– தோழர்களின் உணவு, ஓய்வு ஏற்பாடுகள்

வரவேற்புக் குழுவின் அர்ப்பணிப்பு

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், போராட்டக் களத்தின் முன்னணி வீரரு மான ஆர்.ராமமூர்த்தி தலைமை யில் 143 தோழர்கள் கொண்ட வரவேற்புக் குழு களமிறங்கியுள்ளது. என். சுப்பிர மணியன் செயலாளராகவும்,  பி. குமார் பொருளாளராகவும் பொறுப்பேற்றுள்ள இந்த வரவேற்புக் குழு அர்ப்பணிப்புடன் முழு வீச்சில் பணிகளை முடுக்கி விட்டுள் ளது.

அயராத உழைப்பு

வரவேற்புக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். புயல் மழையால் ஏற்பட்ட இடர்பாடுகளையும் மீறி, மாநாட்டு ஏற்பாடுகள் தடையின்றி முன்னேறி வருகின்றன.

விழுப்புரம் மக்களின் ஆதரவு

உழைக்கும் மக்களின் கோட்டை யாக விளங்கும் விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள், முறைசாரா தொழிலா ளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மாநாட்டு ஏற்பாடுகளுக்கு உற்சாக ஆதரவு அளித்து வருகின்றனர். நிதி திரட்டுதல் முதல் பிரச்சார பணிகள் வரை அனைத் திலும் மக்கள் பங்களிப்பு அபாரமாக உள்ளது. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்று நாட்கள்

ஜனவரி 3 அன்று விழுப்புரம் நகரின் வீதிகள் செம்படையின் அணிவகுப்பால் சிவந்து போகும்! ஆயிரக்கணக்கான தோழர்கள், உயர்ந்து பறக்கும் சிவப்புக் கொடிகளுடன், “உழைப்பவர்களே உலகை ஆள்வோம்!” என்ற முழக்கத்துடன் அணிவகுத்துச் செல்வர். 

மக்கள் கடலாய் திரளும் பொதுக்கூட்டம்

புதிய பேருந்து நகராட்சி மைதானம் மக்கள் கடலாக மாறும்! விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என சமூகத்தின்  அனைத்து பிரிவினரும் ஒன்றுகூடி, புதிய சமுதாயத்துக்கான தங்கள் கனவுகளை பகிர்ந்து கொள்வர்.

மாநாட்டின் முக்கிய நோக்கங்கள்

– சாதி, மத வேறுபாடுகளை களைந் தெறியும் போராட்டத்தை தீவிரப்படுத்துதல்
– பெண்களின் உரிமைகளுக்கான குரலை வலுப்படுத்துதல்
– தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் போராட்டங்களை முன்னெடுத்தல்
– விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டுதல்

இயற்கைச் சீற்றங்களையும் மீறி, பெஞ்சால் புயலின் தாக்கத்தையும் தாண்டி, மக்கள் நலனுக்காக ஒன்றி ணைந்து போராடும் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக இம்மாநாடு அமையும்.

எதிர்காலத்திற்கான திசை

– டிஜிட்டல் யுகத்தில் புதிய போராட்ட வடிவங்களை உருவாக்குதல்

– இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் திட்டங்கள்

– சமூக ஊடகங்களில் மக்கள் குரலைஒலிக்கச் செய்தல்.

இந்த மாநாட்டிலிருந்து புறப்படும் மாற்றத்தின் காற்று, தமிழகம் முழுவதும் வீசும்!

செம்மயாகும் விழுப்புரம்

விழுப்புரம் நகரின் ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு வீதியும் செம்மை யாகி வருகிறது. சிவப்புக்கொடிகள், வரவேற்பு வளைவுகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் என மாநாட்டின் முன்னேற்பாடுகள் மக்களின் ஆர்வத்தை தூண்டி வருகின்றன.

“இந்த மாநாடு வெறும் கூட்டமல்ல – இது ஒரு வரலாற்று திருப்புமுனை! உழைக்கும் மக்களின் விடுதலைக்கான புதிய பாதை இங்கிருந்துதான் தொடங்கும்!” என்கிறார் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் ஆர். ராம மூர்த்தி.

விழுப்புரம் மண்ணில் நடைபெற விருக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள், வருங்கால சமூக மாற்றத்துக்கான விதை களாக அமையும். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்  கல்லாக இம்மாநாடு திகழும்.
 

என்.சுப்பிரமணியன்
சிபிஎம் விழுப்புரம்
மாவட்டச் செயலாளர் 

Leave a Reply