மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24வது அகில இந்திய மாநாடு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரை மாவட்டத்தில் எழுச்சியுடன் நடை பெறுகிறது. தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் விழுப்புரம் நகரில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த மாநாடுகளுக்கு புதிய பாடல்கள் தயாரிப்பு முகாம் பாரதியார் பிறந்தநாளில் துவங்கியது. புதுச்சேரியில் துவங்கிய இந்த முகாமிற்கு நாடகவியலாளர் பிரள யன் தலைமை தாங்கினார். கவிஞர்கள் நவகவி, நன்னிலம் வரத. வசந்தராஜன், கவிஞர் தனிக்கொடி மற்றும் பாடகர்கள் கரிசல்குயில் கிருஷ்ண சாமி, கரிசல் கருணாநிதி, மேட்டூர் வசந்தி புதுக்கோட்டை சுகந்தி, உடு மலை துரை அரசன், பத்திரிகையாளர் கவின்மலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சப்தர் ஹாஸ்மி கலைக்குழுவின் பாடகர்கள் அன்புமணி, செல்வம், உமா, சேகர் ஆகியோர் வாத்திய இசை கலைஞர்கள் அமர்நாத், விநா யகம், ஞானவேல், ராஜ் ஆகியோர் முகாமில் பங்கேற்றுள்ளனர். மூன்று நாள் நடைபெறும் முகாமில் உழைப் பாளி மக்களின் சொல்லொண்ணா துயரங்களில் இருந்து மாற்றத்திற் கான அரசியலை தமிழகம் எங்கும் கொண்டு செல்லும் வகையில் பாடல்கள் தயாரிக்கப்படுகிறது.