24 வது மாநில மாநாடு

வில்லாபுரத்திலிருந்து விழுப்புரத்திற்கு… கொடிப் பயணம் தொடங்கியது !

Vilupuram Conference

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாட்டில், தியாகிகள் நினைவாக ஏற்றப்படவுள்ள செங்கொடி 23-ஆவது மாநாடு நடைபெற்ற மதுரையிலிருந்து செவ்வாயன்று (டிச.31) மாலை புறப்பட்டது. வில்லாபுரத்தில் தியாகி லீலாவதி நினைவிடத்தில் கட்சியின் தெற்கு பகுதிக்குழு செயலாளர் ஜெ. லெனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி., தியாகிகள் நினைவுக் கொடியை எடுத்துக் கொடுத்து கொடிப்பயணத்தைத் துவக்கி வைத்தார்.  மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. பாலபாரதி, எஸ். கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னதுரை எம்எல்ஏ ஆகியோர் கொடியைப் பெற்றுக்கொண்டனர்.  கட்சியின் மூத்த தலைவர் சி. ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Invitation 1
Invitation 2
Invitation 3

‘சுரண்டல்- ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவத் தமிழ்நாடு மலரட்டும்!’ என்ற கொள்கை முழக் கத்துடன் தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் நுழைவு வாயில் – தோழர் சீத்தாராம் யெச்சூரி அரங்கத்தில் (ஆனந்தா திருமண மஹால்) வெள்ளிக்கிழமை (ஜன.3)  காலை 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சி களுடன் மாநாடு தொடங்குகிறது. மாநாட்டின் துவக்கமாக, ‘பாசிச  எதிர்ப்பு கண்காட்சி’யை கட்சியின் மூத்தத் தலைவர் டி.கே. ரங்க ராஜன் திறந்து வைக்கிறார். கொடியேற்றுதல் தீயாக தீபம் தோழர் லீலாவதி உள்ளிட்ட தியாகிகளின் நினைவாக மதுரையில் இருந்து எடுத்து வரப்படும் செங்கொடியை மூத்தத் தலைவர் ஏ.லாசர் பெற்றுக் கொள்கிறார். 24 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ள கொடிக்கம்பத்தில் காலை  9 மணிக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ. பெருமாள் செங் கொடியை ஏற்றி வைக்கிறார்.  அதைத் தொடர்ந்து, தியாகி களின் நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறு கிறது. பொது மாநாடு அதைத்தொடர்ந்து, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில்  பொது மாநாடு துவங்குகிறது. மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிகிறார்.  முன்னதாக, வரவேற்புக் குழுவின் செயலாளர் ஆர். ராமமூர்த்தி வரவேற்கிறார். பொது மாநாட்டை துவக்கி வைத்து, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி உரையாற்றுகிறார். சிபிஐ  மாநிலச் செயலாளர் இரா. முத்தர சன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத் தம்பி ஆகிய இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கு கின்றனர். பிரதிநிதிகள் மாநாடு வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு பிரதிநிதிகள் மாநாடு துவங்குகிறது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநிலக்குழுவின் அரசியல் ஸ்தாபன அறிக்கையை சமர்ப் பிக்கிறார். அதைத்தொடர்ந்து, பிரதி நிதிகளின் விவாதம் தொடங்கு கிறது.

செம்படை அணிவகுப்பு

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மாநாட்டு அரங்கம் முன் பிருந்து தொடங்கும் கம்பீரமான செந்தொண்டர் பேரணியை கட்சி யின் மூத்தத் தலைவர் அ. சவுந்தர ராசன் கொடியசைத்து துவக்கி  வைக்கிறார். இந்த பேரணி யில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான செந்தொண்டர்கள் செங்கொடி யுடன் அணிவகுத்துச் செல்கின்ற னர். சிலம்பம், தீப்பந்தம் உள்ளிட்ட வீர விளையாட்டுக்களுடன் லட்சக் கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். பொதுக் கூட்டம் பேரணி நிறைவாக, விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில் தோழர் என். சங்கரய்யா நினைவுத் திடலில் (நகராட்சி மைதானம்) பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக் கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிர காஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ் ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்று கின்றனர்.

பிரதிநிதிகள் விவாதம்

ஜனவரி 4, 5 ஆகிய இரண்டு  நாட்கள் பிரதிநிதிகள் விவாதம் நடை பெறுகிறது. 5-ஆம் தேதி பிற்பகல் விவாதம் மீதான தொகுப்புரை,  புதிய மாநிலக்குழு – தேர்வைத் தொடர்ந்து அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் நிறைவுரையாற்று கிறார்.

Leave a Reply