24 வது மாநில மாநாடுமற்றவை

24 வது மாநில மாநாடு: கருத்தரங்கத்தில் ரூ.1 லட்சம் நிதி !

Sukumaran Talking On 24th Conference

விழுப்புரம், டிச.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டையொட்டி விழுப்புரத்தில் செவ்வாயன்று (டிச.17) கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் நாட்டில் உழைக்கும் மக்கள் சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்திற்கு  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுகுமாறன், டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் என.சுப்பிரமணியன், ஆகியோர் கலந்து கண்டு பேசினர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், பி.குமார், ஏ.சங்கரன், எஸ்.கீதா, ஜி.ராஜேந்திரன், சே.அறிவழகன், ஆர்டி.முருகன் மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள் ஆர்.கண்ணப்பன், கே.சிவகுமார், கே.உலகநாதன், ஏ.ராஜீவ்காந்தி, ஆர்.கிருஷ்ணராஜ், மாவட்ட ஏ.கிருஷ்ணமூர்த்தி, கே.சுந்தரமூர்த்தி, பி.சிவராமன், உ.கார்த்தி, எஸ்.சித்ரா,ஆர்.கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.1 லட்சம் நிதி

இந்த கருத்தரங்கில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுகுமாறன், டி.ரவீந்திரன் ஆகியோரிடம் விக்கிரவாண்டி ஒன்றியக் குழு சார்பில் மாநில மாநாட்டு நிதியாக ரூ.1 லட்சம் வழங்கினர். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன் பி.குமார், ஏ.சங்கரன், ஜி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஆர்.கிருஷ்ணராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் எ.கிருஷ்ணமூர்த்தி வி.கிருஷ்ணராஜ், எஸ்.சித்ரா உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply