மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு வருகிற 2025 ஜனவரி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாநகரில் நடைபெற உள்ளது. மக்கள் போராட்டங்களின் வரலாற்றுப் பெருமை கொண்ட விழுப்புரத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டை வர லாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றிட விரி வான வரவேற்புக் குழு அமைக்கப்பட் டுள்ளது. மாநாட்டு வரவேற்புக் குழுவின் அனைத்துப் பிரிவுகளும் தங்கள் பணி களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நிதி திரட்டுதல், விளம்பரப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. மாநாட்டின் முக்கியத்துவத்தை மக்களி டம் கொண்டு சேர்க்கும் வகையில் கருத்தரங்குகளும், பரப்புரைகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
பெருமிதம் கொள்ளும் போராட்ட வரலாறு
விழுப்புரம் மாவட்டம் முழுக்க முழுக்க கிராமப்புற மக்களை உள்ள டக்கியது. இம்மாவட்டத்தில் சாதிய அணிதிரட்டலுக்கு எதிராக இளை ஞர்களை ஒருங்கிணைத்த பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையே சாரும். கட்சியின் வழிகாட்டுதலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைவருக்கும் வேலை, அனைவரு க்கும் கல்வி, நிவாரணம் வழங்க வலியு றுத்தியும், கிராமப்புற ஏழை-எளிய மக்களின் குடிநீர், தெருவிளக்கு, சுடு காட்டுப் பாதை, ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தியும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியது.
சாதி-மத வேறுபாடுகளைக் கடந்து இளைஞர்களை ஒன்றிணைப்பதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னோடியாகத் திகழ்ந்தது. அனை வருக்கும் வேலை கேட்டும், கல்வி கேட்டும் மாநிலம் தழுவிய சைக்கிள் பிரச்சார பயணத்தை முன்னெடுத்தது. விழுப்புரத்தில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்பிரச்சாரத்தில் ஆர்வமுடன் பங்கேற்றனர். புதிய தொழிற்சாலைகள் அமைக்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங் களை நடத்தியதோடு, ரத்ததான முகா ம்கள் மூலம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது. மக்க ளுக்கான அடிப்படை வசதிகளை வென்றெடுக்க தொடர்ந்து களத்தில் நின்று போராடியது.
அடக்குமுறைகளை வீழ்த்திய வீரம்
கட்சியின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்ட அப்போதைய ஆளும்கட்சி அதிமுக, இந்திய ஜன நாயக வாலிபர் சங்க இளைஞர்கள் மற்றும் கட்சித் தோழர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்து, காவல்துறை மூலம் கடும் நெருக் கடிகளை ஏற்படுத்தியது. ஆனால் கட்சி யின் வழிகாட்டுதலில் இளைஞர்கள் அனைத்து அடக்குமுறைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு, வீறு கொண்டெழுந்தனர். கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்துவதிலும், போதைப் பழ க்கங்களுக்கு எதிராக இளைஞர்களை ஒன்றுதிரட்டுவதிலும் கண்டமங்கலம் பகுதியில் தீவிர போராட்டங்கள் நடத்தப்பட்டன. சாராய வியாபாரிகளின் கொடூர தாக்குதலால் இளம் தோழர்கள் உயிரிழந்த போதிலும், போராட்டக் களம் தொடர்ந்து வலுப்பெற்றது.
சங்கரா பரணி ஆற்றில் மணல் கொள்ளையை முறியடித்ததும் குறிப்பிடத்தக்க வெற்றிகளில் ஒன்றா கும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான உறுதியான குரல் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. மயிலம் ஒன்றியம் சின்ன நெற்குணம் ரேஷன் கடையில் தலித் மக்கள் செருப்பணிந்து வரு வதை எதிர்த்த சம்பவத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் தலைமையில் பெரும் போராட் டம் நடத்தப்பட்டது. ஆலய நுழைவு உள்ளிட்ட உரிமைப் போராட்டங்களில் காவல் துறையின் அடக்குமுறைகளையும், பொய் வழக்குகளையும் கட்சித் தலை வர்களும், தோழர்களும் உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றி கண்டனர். தீண்டாமை கொடுமைகளுக்கு எதி ரான போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கட்சி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது.
உழைப்பாளர்களின் உரிமைகளுக்காக
விழுப்புரம் நகர கடைவீதிகளில் பணிபுரியும் சுமைத் தொழிலா ளர்களின் குறைந்தபட்ச ஊதியத் திற்காக கட்சி நீதிமன்றங்களிலும், தெருக்களிலும் போராடியது. மின்வா ரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரத்திற்காக தொடர் போராட்டங் கள் நடத்தப்பட்டு வெற்றி கண்டது. 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தரப் பணி பெற்றனர். மாநாட்டை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக்குவோம் புயல், மழை, வெள்ளப் பாதிப்பு களால் மாவட்டம் சீர்குலைந்துள்ள இந்நேரத்திலும், மாநாட்டை சிறப்புற நடத்த கட்சித் தோழர்களும், வெகு ஜன அமைப்புகளும் களத்தில் இறங்கி யுள்ளனர். மாநாட்டு ஊர்வலத்தில் செந் தொண்டர் அணிவகுப்பு பிரமிக்க வைக்க உள்ளது.
“உழைக்கும் மக்க ளின் ஒற்றுமையை வலுப்படுத்திட, சாதி-மத வெறி சக்திகளை முறி யடித்து முன்னேறுவோம்” என்ற முழக் கத்துடன் மாநாட்டுப் பணிகள் வேகம் பெற்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தின் மக்கள் போராட்ட வரலாற்றில் புதிய அத்தி யாயம் படைக்க உள்ள இம்மாநாடு, உழைக்கும் மக்களின் விடுதலைக் கான புதிய பாதையை வகுக்கும் என்ப தில் ஐயமில்லை.
பி.குமார்
மாவட்ட செயற்குழு உறுப்பினர், விழுப்புரம்.