விழுப்புரத்தில் 24 வது மாநாட்டு வரவேற்பு குழு அமைப்பு !
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு, 2025 ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறுகிறது. ஜனவரி 3 ஆம் தேதி காலையில் மாநாடு தொடங்குகிறது. அன்றைய தினம் மாலையில் நடைபெறும் பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இம்மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.