24 வது மாநில மாநாடு: மக்களை அழைக்கும் கலைப் பிரச்சாரம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-வது மாநில மாநாடு ஜனவரி 3,4,5-/ 2025 விழுப்புரத்தில் நடைபெறுவதை ஒட்டி மாவட்ட முழுவதும்-100 மையங்கள் கலை குழு பிரச்சார பயணம் நடைபெற்றது.
சி.பி.ஐ(எம்), 24 வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடக்கவுள்ளது. 2025 ஜனவரி 3-5 தேதிகளில் நடக்கவுள்ள இந்த மாநாடு தொடர்பான செய்திகளை இந்த வகைப்பாட்டில் வாசிக்கலாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-வது மாநில மாநாடு ஜனவரி 3,4,5-/ 2025 விழுப்புரத்தில் நடைபெறுவதை ஒட்டி மாவட்ட முழுவதும்-100 மையங்கள் கலை குழு பிரச்சார பயணம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடக்கவுள்ள சி.பி.ஐ(எம்) மாநில மாநாட்டை ஒட்டி, சுவர்களில் மாநாட்டுச் செய்திகள் மிளிர்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தின் வர லாற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு தனித்துவ மானது. சாதி ஒழிப்பு, விவசாயிகள் நலன், தொழிலாளர் உரிமை, சமூக நீதி என அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது. சமூக நல்லிணக்கத்தையும், பொரு ளாதார முன்னேற்றத்தையும் ஒருங்கே கொண்டு செல்லும் கட்சி யின் பயணம் தொடர்கிறது. இவ்வாறு மாவட்டத்தின் சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சியில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- வி.ராதாகிருஷ்ணன் அனைத்து பகுதி மக்களும் நல்வாழ்வு பெற அயராது பணியாற்றி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் வருகிற ஜனவரி 3,...
விழுப்புரம், டிச.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டையொட்டி விழுப்புரத்தில் செவ்வாயன்று (டிச.17) கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் நாட்டில் உழைக்கும் மக்கள் சந்திக்கும் சவால்கள் என்ற...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24வது அகில இந்திய மாநாடு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரை மாவட்டத்தில் எழுச்சியுடன் நடை பெறுகிறது. தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் விழுப்புரம் நகரில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை யான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் கட்டமைப்பில் மாநாடு கள் என்பவை வெறும் கூட்டங்கள் அல்ல - அவை மக்கள் விடுதலைக்...
2025 ஜன. 3-5 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள, சி.பி.ஐ(எம்) 24வது மாநில மாநாட்டு இலட்சினையை கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் வெளியிட்டார். அரசியல் தலைமைக்குழு...
செஞ்சி வட்டச் செயலாளர் ஆல்பட் வேளாங்கண்ணி, மைக்கேல் எலிசபெத் ஷீபாவின் 9 வயது மகன் ஆ.அனிஷ் டி புக்கோக்கு, கடந்த ஓராண்டாக உண்டியலில் சேமித்த பணம் ஆயிரம் ரூபாயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில மாநாட்டு நிதியாக மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம், தனது பிறந்த நாளான நவ.11 அன்று வழங்கி னார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு, 2025 ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறுகிறது. ஜனவரி 3 ஆம் தேதி காலையில் மாநாடு தொடங்குகிறது. அன்றைய தினம் மாலையில் நடைபெறும் பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இம்மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.