24வது காங்கிரசுக்கான வரைவு அரசியல் தீர்மானம்
24வது காங்கிரசுக்கான வரைவு அரசியல் தீர்மானத்தை இங்கே பதிவிறக்கலாம்... Download PDF 24வது காங்கிரசுக்கான வரைவு அரசியல் தீர்மானம்...
சி.பி.ஐ(எம்), 24 வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடக்கவுள்ளது. 2025 ஜனவரி 3-5 தேதிகளில் நடக்கவுள்ள இந்த மாநாடு தொடர்பான செய்திகளை இந்த வகைப்பாட்டில் வாசிக்கலாம்.
24வது காங்கிரசுக்கான வரைவு அரசியல் தீர்மானத்தை இங்கே பதிவிறக்கலாம்... Download PDF 24வது காங்கிரசுக்கான வரைவு அரசியல் தீர்மானம்...
இடதுசாரிக் கட்சிகளுடைய முக்கியமான பங்களிப்போடு மற்ற ஜனநாயக சக்திகளும் கைகோர்த்த இந்த அரசியல் ஏற்பாடு தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் செல்வாக்கு பெறாமல் தடுப்பதற்கு வெற்றிகரமாக பயன்பட்டது. இந்த வெற்றிக்காக கூட்டணியையும், மக்களையும் வாழ்த்தும் அதே சமயத்தில், சமுதாய தளாத்தில் நிலவும் வேறு பல போக்குகளையும் நாம் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டுமென கூறுகிறேன். கேரளாவிலும் கூட அவர்கள் முன்னேறுகிறார்கள். எனவே, இதைப் பற்றியெல்லாம் நாம் மிகுந்த அக்கறையோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்த்து, தோற்கடித்த தமிழக அரசு, பல்வேறு மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்டும் என்று நம்புகிறோம்.
‘சுரண்டல்- ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவத் தமிழ்நாடு மலரட்டும்!’ என்ற கொள்கை முழக் கத்துடன் தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் நுழைவு வாயில் - தோழர் சீத்தாராம் யெச்சூரி அரங்கத்தில் (ஆனந்தா திருமண மஹால்) வெள்ளிக்கிழமை (ஜன.3) காலை 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சி களுடன் மாநாடு தொடங்குகிறது. மாநாட்டின் துவக்கமாக, ‘பாசிச எதிர்ப்பு கண்காட்சி’யை கட்சியின் மூத்தத் தலைவர் டி.கே. ரங்க ராஜன் திறந்து வைக்கிறார்.
கீழத்தஞ்சையில் நிலவுரிமைப் போராட்டம் மட்டுமல்ல; தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்கவும் செங்கொடி இயக்கமே முன்னணியில் நின்றது. அதற்கு எதிரான அடக்குமுறைகளின் ஒரு பகுதியாகத்தான் கீழ்வெண்மணியில் , 44 தலித் உயிர்களை, நம் செங்கொடி இயக்க கண்மணிகளை, நிலச்சுவான்தார்கள் உயிரோடு எரித்துக் கொன்றனர். இந்த கோரச்சம்பவத்திற்கு பிறகு கணபதியா பிள்ளை தலைமையில் ஆணையம்அமைக்கப்பட்டது. இடதுசாரிக்கட்சிகள் மேற்கொண்ட முன்னெடுப்பால் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டத்தை வீரியமுடன் எடுத்துச் செல்வதில் தீவிரமாகச் செயல்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதன் தொடர்ச்சியாக சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்ற கடந்த மூன்று ஆண்டுகாலமாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் அனைத்துப் போராட்டங்களுக்கும் நாடு முழுவதும் தனது முழுமையான ஆதரவை, பங்கேற்பதன் மூலம் வெளிப்படுத்தி வருகிறது.
1.5 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக சென்று பிரச்சாரம் - உழைக்கும் மக்களின் கருத்தரங்குகள் - விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் - கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய வாகனப் பிரச்சாரம் - தெருமுனைக் கூட்டங்கள் என மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி மாநாடே காட்சியாக மாறியுள்ளது. கலை நிகழ்ச்சிகளின் தாக்கம் “சமூக ஒடுக்குமுறை தகரட்டும், சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்!” என்ற முழக்கத்துடன் புதுச்சேரி சப்தர் ஹஷ்மி, கல்லை குறிஞ்சி, சேலம் மாங்குயில் கலைக் குழுக்கள் களமிறங்கின. 12 இடைக்கமிட்டிகள் மூலம் தினமும் 10 மையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய கலைப் பிரச்சாரம் மக்கள் மனங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை 1920இல் தாஷ்கண்ட் நகரத்தில் அமைக்கப்பட்ட போது அதில் இடம்பெற்ற ஏழு பேரில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் ஆட்சி செய்த மேற்கு வங்கம், கேரளம், திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலின சமத்துவத்துக்குப் பாதை போடப்பட்டது. மேற்கு வங்கத்தில் கூட்டுப்பட்டா, உள்ளாட்சிகளில் கூடுதல் பிரதிநிதித்துவம், கேரளாவில் பெண்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த குடும்பஸ்ரீ போன்ற திட்டங்கள், அடிமட்டத் திட்டமிடல், கடை ஊழியர்கள் உட்காரும் உரிமைச் சட்டம், திரிபுராவில் பழங்குடிப் பெண் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை சாத்தியமாகியுள்ளன. திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீதிபதி ஹேமா கமிட்டி மலையாளத் திரைத்துறையில் உருவாக்கப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட முயற்சி எடுக்கப்பட்டதில்லை. 33% இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க ஊசலாட்டமற்ற போராட்டத்தை சிபிஎம் நடத்தியது.
சிபிஐ(எம்) திட்டத்தின் அடிப்படையில் பிரதான அபாயமாக உருவாகியுள்ள வகுப்புவாத சக்திகளை முறியடிக்கும் நோக்கத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடுகள் நடத்தி அவ்வப்போது நிலைகளுக்கு ஏற்ப நடைமுறை உத்திகளை உருவாக்குகின்றன. இந்த நடைமுறைக் கொள்கையை உருவாக்குவதற்கும் கட்சியின் அணிகளின் பங்கு பிரதானமானதாகும்.
அடையாளத் திரட்டல் ஒடுக்கு முறைக்கு ஆளான மக்களிடையே தீவிரமாக வேலை செய்கிறது. சாதி ஒடுக்கு முறையை அகற்ற பட்டியலின மக்கள் தங்களது சாதி அடிப்படையில் அணிதிரளுமாறு தூண்டப்படுகின்றனர். ஒடுக்கு முறைக்கு எதிராக பட்டியல் இன மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவது ஜனநாயக போராட்டமாகும்.அதனை அடையாள அரசியல் திரட்டலாக மட்டும் பார்க்க இயலாது.இந்த வகையான அடையாள திரட்டலில் உள்ள சில நியாயமான கவலைகளை தன்னுள் உட்படுத்திக்கொள்ளும் திறன் மார்க்சியத்திற்கு மட்டுமே உண்டு.அதனால்தான் காலம் காலமாக வர்க்க ஒடுக்குமுறையுடன் இணைத்து சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக மார்க்சிஸ்ட்கள் வர்க்க ஒற்றுமையைக் கட்டி போராடி வந்துள்ளனர்
எதிர்காலத்தில் பாஜகவை எதிர்த்த போராட்டத்தையும், இந்துத்துவா, மதவெறி கருத்தியலையும், தமிழ்த் தேசியம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் திசைதிருப்பல் வேலைகளையும், சாதிய அணி சேர்க்கை, சமூக ஒடுக்குமுறை போன்றவைகளில் கருத்தியல் ரீதியான வலுமிக்க போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்வதோடு, இடதுசாரி அணியினை வலுமிக்க அணியாகவும், இதற்கு அடிநாதமாக திகழும் சிபிஐ (எம்) கட்சியினுடைய சொந்த பலத்தை அதிகரிப்பதுமான கடமைகளை விழுப்புரம் மாநாடு நிறைவேற்ற உள்ளது.