திருவாரூரில் நடைபெறும் இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டிற்கு வந்த சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, ஜலகண்டாபுரம், கலர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் இளம் தோழர் ஆர். தாமரைச் செல்வன் (வயது 19) நேற்று (25.8.2022) தஞ்சை பெரிய கோயில் அருகே செல்லும் கால்வாயில் பல் துலக்குவதற்காக இறங்கிய போது கால் வழுக்கி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளதோடு, மீளா துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது.
உயிரிழந்த மாணவரின் பெற்றோர்களுக்கும், குடும்பத்தாருக்கும் மற்றும் மாணவர் அரங்க தோழர்களுக்கும் கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்