தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர கட்சிகளும், கரும்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இக்கோரிக்கையை ஏற்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பையும் சேர்த்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம் கரும்பு விவசாயிகளும், பொது மக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.