கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர் நிலச்சரிவால் மரணமடைந்தவற்களுக்கு சி.பி.ஐ (எம்) அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது. தற்போதைய நிலவரப்படி 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இடிபாடுகளுக்கிடையில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். அதிகப்படியான சேதங்களும், இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
வல்லுனர்கள் மற்றும் மக்களின் துணையோடு துரிதமான மீட்பு நடவடிக்கைகளை கேரள அரசு முடிக்குவிட்டுள்ளது. ஒன்றிய அரசும் மாநில அரசிற்கு மீட்பு, சீரமைப்பு மற்றும் மருகுடியமர்த்தலுக்கு தேவையான உதவிகளை போர்க்கால அடிப்படையில் வழங்கும் என நம்புகிறோம்.