24 வது மாநில மாநாடு

விழுப்புரத்தில் 24 வது மாநாட்டு வரவேற்பு குழு அமைப்பு !

Untitled

விழுப்புரம், செப். 18 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு, 2025 ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறுகிறது. ஜனவரி 3 ஆம் தேதி காலை யில் மாநாடு தொடங்குகிறது. அன்றைய தினம் மாலையில் நடை பெறும் பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இம்மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிர காஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தும் வகையில், விழுப்புரத்தில் புதன்கிழமை யன்று (செப்.18) 143 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப் பட்டது.

ஆர். ராமமூர்த்தி – என். சுப்பிரமணியன்

சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர் ஆர். ராமமூர்த்தி தலைமை யிலான இந்த 143 பேர் கொண்ட வரவேற்பு குழுவின் செயலாளராக- கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், பொருளாளராக மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி. குமார் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் வரவேற்புக்குழுத் துணைத்தலைவர்களாக வழக்கறி ஞர் ஏ. கோதண்டம், வி. ராதா கிருஷ்ணன், ஏ. சங்கரன், ஜி. ராஜேந்திரன், எஸ். வேல்மாறன், துணைச் செயலாளர்களாக எஸ். முத்துக்குமரன், எஸ். கீதா. ஆர். மூர்த்தி, சே. அறிவழகன் ஆர்.டி.முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்திற்கு விழுப் புரம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் தலைமை தாங்கி னார். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் துவக்கவுரையாற்றி னார்.

தமிழகத்தில் ‘இடதுசாரி மாற்று’ கொள்கையை முன்னெடுப்போம்

“ஜனவரி 3, 4, 5 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறும் கட்சி யின் மாநில மாநாட்டில், கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் பிரச்ச னைகளில் கட்சி மேற்கொண்ட தலையீடுகள், நடத்தியுள்ள போரா ட்டங்கள், அரசியல் நிலைபாடு கள், ஜனநாயகப் பூர்வமாக விவா திக்கப்பட்டு எதிர்வரும் காலத்திற் கான கடமைகள் வரையறுக்கப்பட உள்ளன” என்றார்.

மேலும், “இந்த மாநில மாநாட்டில், தமிழ்நாட்டில் இடது சாரி மாற்று கொள்கையை முன் னெடுப்பது என்ற அடிப்படையில் தமிழகம் தழுவிய அளவில் பிரச்சா ரம் மேற்கொள்ளவும், குறிப்பாக தமிழ்நாட்டில் சாதி மோதல்கள், சாதி அமைப்புகள் வலுவடைந்து வருவதால், சாதி சமூக அமைப்பு களுக்கு முடிவு கட்ட, சாதி, மதங் களுக்கு அப்பாற்பட்டு மக்கள் போராட முன்வர வேண்டும் என்ற செய்தியை- குறிப்பாக வட மாவட்டங்களில் வீடு, வீடாக எடுத்துச் செல்வது என்று தீர்மானித் துள்ளோம்” என்றும் கே. பால கிருஷ்ணன் தெரிவித்தார்.

மாநில மாநாட்டை வெற்றிகரமாக்குவோம்!

தொடர்ந்து பேசிய அவர், “மாநில மாநாட்டை நடத்துவதற்கு இன்னும் மூன்று மாத காலமே உள்ளது. இதற்கிடையில் வட கிழக்குப் பருவ மழையும் வர உள் ளது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு, முன்கூட்டிய திட்டமிடல் களுடன், நிதி வசூல், விளம்பர பணி கள் என்று அனைத்து பணிகளை யும் உடனடியாக தொடங்கி சுறு சுறுப்பாக செயல்பட வேண்டும். ‘நாளை என்பது நமக்கு இல்லை. எதைச் செய்தாலும் இன்றே செய்து முடிப்போம்’ என்று பிடிவாதமாக செயல்பட வேண்டும்; மாநில மாநா ட்டிற்கு வருகை தரும் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் நமது பணி வெற்றிகரமாக அமைய வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.