மத்தியக் குழு

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் நீதிமன்றங்களால் வன்முறை – பதற்றம்! உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

Cpim 222

மதம் சார்ந்த இடங்களில் சட்டப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், உச்ச நீதி மன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள சிவில் நீதிமன்றம் ஒன்று, ஆஜ்மீர் தர்காவின் அடியில் கோயில் இருந்ததா என்பதைக் கண்டறிய அதனை ஆய் வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரி  அளிக்கப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. இது, தேவையற்றது மற்றும் இதற்கு சட்டப்பூர்வமான நிலைப்பாடு எதுவும் கிடையாது. 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத் தின் கீழ், 1947 ஆகஸ்ட் 15-க்கு முன்  இருந்த வழிபாட்டுத் தலங்கள் குறித்து  சட்டப் பிரச்சனை எதையும் எந்த நீதிமன்றமும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. அப்படியுள்ள நிலையில் இவ்வாறு ஒரு நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருப்பது, மேற்படி சட்டத்தின் ஷரத்துகளுக்கு எதிரான ஒன்றாகும். இந்தச் சட்டத்தை மீறி, உத்திர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஒரு மசூதியை ஆய்வு செய்வது சம்பந்தமாக அளிக்கப்பட்ட பிழையான  தீர்ப்பு ஒன்றின் விளைவாக- அந்த மசூதியை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து வன்முறை வெறியாட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு ஐந்து பேர் மரணம் அடைந்துள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றம் இதில் உட னடியாகத் தலையிட்டு, தாங்கள் 2019-இல் அயோத்தி தீர்ப்புரையில் கூறி யிருப்பதற்கு இணங்க, மத வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத் தின் அடிப்படையில் நீதிமன்றங்களில் இத்தகைய சட்டப்பூர்வமான விசார ணைகள் மேற்கொள்வதற்கு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.