24 வது மாநில மாநாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க விழுப்புரத்தில் சரித்திரம் படைக்கும் சிபிஐ(எம்) 24 வது மாநாடு !

Viluppuram Protest

– வி.ராதாகிருஷ்ணன்

அனைத்து பகுதி மக்களும் நல்வாழ்வு பெற அயராது பணியாற்றி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் வருகிற ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதி களில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது.

உழைப்பாளி வர்க்கத்தின் ஒரே பகுதியாக இருக்க வேண்டிய சமூக ரீதியான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை, சமூக ரீதியில் பிற்படுத்த ப்பட்ட பகுதி மக்கள் உட்பட அனைத்து சமூக மக்களும் அங்கீகரித்திட வேண்டும். சாதி வேறுபாடுகளை தவிர்த்து, மக்கள் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் 2023 ஆம் ஆண்டில் “பட்டியலின-பழங்குடி யின மக்கள் உரிமை மீட்பு மாநில மாநாட்டை” விழுப்புரத்தில் நடத்தி, மாவட்டத்தின் அனைத்து பகுதி மக்களின் நன்மதிப்பையும் பெற்றது கட்சி.

இந்த சூழலில் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற வுள்ளது மிகப்பெரிய வாய்ப்பாகும். வழிகாட்டும் கலங்கரை விளக்குகள் தென்னாற்காடு மாவட்டமாக இருந்த பகுதி, தற்போது கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் என மூன்று மாவட்டங்களாகச் செயல்படு கிறது. மூத்த தோழர்கள் எஸ்.நடரா ஜன், ஸ்தாபக தலைவர் சி.கோவிந்த ராஜன், அருமைத் தலைவர் என்.ஆர்.ராமசாமி, தொழிற்சங்கத் தலைவர் கே.திருவேங்கடம், செ.தனசேகரன், தற்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பா.ஜான்சி ராணி  உள்ளிட்ட தலைவர்களின் வழிகாட்டு தல் எப்போதும் எங்களுக்கு வழி காட்டி வருகிறது.

மிளிரும் அரசியல் சக்தியாக சிபிஎம்

எங்களின் முன்னோடிகள் வழியில், விழுப்புரம் மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சியில் அக்கறையு டன் வழிகாட்டி வரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மூத்த தோழர் ஆர். ராமமூர்த்தி, தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் உறுப்பினரும் கட்சியின் மூத்த தலை வருமான தோழர் ஏ.கோதண்டம் ஆகி யோரின் அர்ப்பணிப்பும் உழைப்பும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தொண்டால் பொழுதளந்த தூயத் தலைவர் ஜி.வீரய்யன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.குணசேகரன், ப.செல்வசிங், கே.கனகராஜ், கே.தங்க வேல், நூர்முகமது போன்ற மாபெரும் ஆளுமைகளின் வழிகாட்டுதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழுப்பு ரம் மாவட்டத்தின் புறக்கணிக்க முடி யாத அரசியல் சக்தியாக மிளிர்கிறது.

மறக்க முடியாத கூலி உயர்வு போராட்டம்

கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள சிறுவந்தாடு பகுதி விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி யாகும். அறுவடை கூலியை உயர்த்தக் கோரி விவசாயத் தொழி லாளர்கள் வேலை நிறுத்தப் போராட் டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் இன்றைய மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ் ணன், தோழர் ஆர்.ராமமூர்த்தி இருவ ரும் வழிகாட்டினர். முத்தரப்புக் கூட்டம் நடத்தி விவசாயத் தொழிலாளர் களுக்கு கூலி உயர்வு பெற்றுத் தந்தனர். துப்பாக்கிச் சூட்டையும் மீறி உறுதியான போராட்டம் 1998-ல் விழுப்புரம் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரம் அறி முகம் செய்யப்பட்டபோது, நவமால் மருதூர் ஊராட்சியில் முதன் முதலாக போராட்டம் துவங்கியது. விவசாயத் தொழிலாளர்களுடன் நடுத்தர, சிறு  விவசாயிகளும் இணைந்து போராடி யது புதிய அனுபவம். கோட்டாட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்து, வயல் வெளி களத்துமேட்டில் முத்தரப்பு கூட்டம் நடத்தி, விவசாயத் தொழி லாளர்களின் வாழ்க்கைக்கு உத்தர வாதம் இல்லாத அறுவடை இயந்தி ரத்தை வெளியேற்றினர்.  

சிறுவந்தாடு கிராமத்தில் நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தலைமையில் போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் காயமடைந்தனர். ஆனால் போராட் டத்தை ஒருபோதும் கைவிடவில்லை. அந்த தோழர்கள் அனைவரையும் இறுதி வரை கட்சி பாதுகாத்தது. இப் போராட்டத்திற்கு தோழர் ஜி.வீரய்யன் வழிகாட்டினார்.

மாற்றுத்திறனாளிகள் நலனில்…

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.68 கோடி பேர் ஊனமுற்றோர் உள்ள தாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையான மதிப்பீடுகளின்படி, மக்கள்தொகையில் 5 விழுக்காடு இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும், அரசின் நலத் திட்டங்கள் அவர்களுக்கு முறையாகக் கிடைக்கவும் கட்சி தொடர் போராட் டங்களை நடத்தி வருகிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க கட்சி முக்கியப் பங்காற்றி யது. “சாத்தியம் இல்லாததை சாத்திய மாக்குவது புரட்சிகர கலை” என்ற உணர்வோடு மாநாட்டுப் பணிகளில் தோழர்கள் அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அகில இந்திய தலைவர்கள், மாநில தலைவர்கள், பிரதிநிதி தோழர்கள் அனைவரையும் வரவேற்க காத்தி ருக்கிறார்கள்.

40 ஆண்டுகளில் முத்தான இயக்கங்கள்

வானூர் தாலுகாவில் ஆர்ஷிகா அகர்பத்தி தொழிலாளர்கள் போராட்டம், ஆரோ புட் தொழிற்சாலை போராட்டம், விழுப்புரம் ஷாவல்ஸ் தொழிற்சாலை போராட்டம், அரியலூர், முண்டியம்பாக்கம், பெரிய செவலை சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டங்கள். 1991-ல் நெல் விலை வீழ்ச்சியால் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதுவரை நெல் கொள்முதலை வியாபாரிகள் மட்டுமே செய்தனர்.

இரட்டைக் கொள்முதல் திட்டம் இல்லை. கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கே.வரதராஜன் தலைமையில் நடந்த போராட்டத்தால், அப்போதைய மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் அரசே கொள்முதல் செய்ய உத்தரவு பெற்றுக் கொடுத்தோம். இது இன்றளவும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்குப் பேருதவியாக இருந்து வருகிறது.

Leave a Reply