இடதுசாரி கட்சிகள்செய்தி அறிக்கை

அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் முழங்குமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்!

11

அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் முழங்குமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்-எல்) லிபரேசன் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அ.இ. பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா ஆகியோர் கூட்டறிக்கை.

இந்தியர்கள் மீதான 3-ஆவது தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்று கொண்டிருந்த, இந்திய மாலுமிகளைக் கொண்ட வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இந்தியக் குழுவினர் இடம்பெற்ற கப்பல்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களில் இது மூன்றாவது சம்பவமாகும். தனது முற்றுகையை மீறும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல்களைத் தொடரப்போவதாக அமெரிக்க அரசு அச்சுறுத்தி வருகிறது

உலக ரவுடியாக அமெரிக்கா அராஜகம்

அமெரிக்க நிர்வாகத்தின் இச்செயல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கும், சர்வதேசக் கடற்பரப்பில் சுதந்திரமாகப் பயணிப்பதற்கான கொள்கைகளுக்கும் எதிரானவை. உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முனையும் ஒரு ரவுடியைப் போல அமெரிக்கா செயல்படு கிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இறையாண்மையை காவுகொடுத்த மோடி அரசு!

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, தனது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையிலிருந்து விலகி அமெரிக்காவின் அடிவருடியாகச் செயல்படுவதன் மூலம் தனது கடமையைச் செய்வதில் படுதோல்வி அடைந்துள்ளது. அரசின் பலவீனமான எதிர்வினையும், அமெரிக்காவிடமிருந்து மன்னிப்பை கோரத் தவறியதும் இதற்குச் சமீபத்திய உதாரணமாகும். இது இந்தியாவின் இறையாண்மைக்கும் சுயமரியாதைக்கும் விடுக்கப்பட்ட அவமதிப்பாகும்.

அமெரிக்காவை எதிர்த்து நிற்க வேண்டும்!

ஈரான் மற்றும் மேற்கு ஆசியா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் மூலம், எரிசக்திச் செலவுகள் அதிகரிப்பு, உரங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவற்றால் உலகப் பொரு ளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

‘குளோபல் சவுத்’ (Global South) எனப்படும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பில் ஒரு முக்கிய நாடாகத் திகழும் இந்தியா, அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும். அமெரிக்காவிற்கு எதிராக நிற்பதில் வளரும் நாடுகளின் குர லுக்கு இந்தியா தலைமை தாங்க வேண்டும்.

நாட்டு மக்கள் போராட முன்வரவேண்டும்!

கொல்லப்பட்ட மாலுமிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்த்தும், இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் போராடுமாறு நாட்டு மக்களை நாங்கள் அறைகூவி அழைக்கிறோம். நாடு முழுவதும் உள்ள எங்கள் அமைப்புகள், அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங் களை ஏற்பாடு செய்வதுடன், இச்சாவு களுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கத் தேவையான அனைத்து ராஜதந்திர நட வடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்தும்.

Leave a Reply