நம்பிக்கையளிக்கும் தமிழ்நாடு, புரட்சிகர இலக்கில் முன்னேறட்டும் ! – எம்.ஏ.பேபி
இடதுசாரிக் கட்சிகளுடைய முக்கியமான பங்களிப்போடு மற்ற ஜனநாயக சக்திகளும் கைகோர்த்த இந்த அரசியல் ஏற்பாடு தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் செல்வாக்கு பெறாமல் தடுப்பதற்கு வெற்றிகரமாக பயன்பட்டது. இந்த வெற்றிக்காக கூட்டணியையும், மக்களையும் வாழ்த்தும் அதே சமயத்தில், சமுதாய தளாத்தில் நிலவும் வேறு பல போக்குகளையும் நாம் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டுமென கூறுகிறேன். கேரளாவிலும் கூட அவர்கள் முன்னேறுகிறார்கள். எனவே, இதைப் பற்றியெல்லாம் நாம் மிகுந்த அக்கறையோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்த்து, தோற்கடித்த தமிழக அரசு, பல்வேறு மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்டும் என்று நம்புகிறோம்.