Tag Archives: CPIM

School
மாநில செயற்குழு

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தத்துக்கொடுக்கும் முயற்சி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என...

468524144 1088915622613329 5801422747079496113 N
24 வது மாநில மாநாடு

தமிழ்நாட்டின் பெருமிதம் மார்க்சிஸ்ட் கட்சி !

கீழத்தஞ்சையில் நிலவுரிமைப் போராட்டம் மட்டுமல்ல; தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்கவும் செங்கொடி இயக்கமே முன்னணியில் நின்றது. அதற்கு எதிரான அடக்குமுறைகளின் ஒரு பகுதியாகத்தான் கீழ்வெண்மணியில் , 44 தலித் உயிர்களை, நம் செங்கொடி இயக்க கண்மணிகளை, நிலச்சுவான்தார்கள் உயிரோடு எரித்துக் கொன்றனர். இந்த கோரச்சம்பவத்திற்கு பிறகு கணபதியா பிள்ளை தலைமையில் ஆணையம்அமைக்கப்பட்டது. இடதுசாரிக்கட்சிகள் மேற்கொண்ட முன்னெடுப்பால் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

Anna Univercity
மாநில செயற்குழு

அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை: எப்.ஐ.ஆர். வெளியான பிரச்சனையில் ஒன்றிய அரசு முகமை மீதும் விசாரணை நடத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்.

அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிய முதல் தகவல் அறிக்கையின் விபரங்கள் வெளிவந்த வழக்கில், தேசிய தகவல் மையத்தை வழக்கு விசாரணை வளையத்திற்குள் கொண்டு...

New Year
மாநில செயற்குழு

சமத்துவசமூகம்மலரட்டும் புத்தாண்டில்புதியபாதைபிறக்கட்டும்!

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சமூக பாரபட்சங்களும் இல்லாத ஒரு புதிய சமத்துவ சமூகம் மலர்வதற்கான ஓர் புதிய பாதையை அமைக்கவும் அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகர்க்கவும் நாம்...

Pongal
மாநில செயற்குழு

பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு இல்லாதது தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றம்! பரிசுத் தொகை வழங்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

பொங்கல் தமிழர்களின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழா ஆகும். பொங்கல் சிறப்பாக கொண்டாட மக்கள் தயராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில்...

24 Th Viluppuram
24 வது மாநில மாநாடு

செம்மயமாக மாறும் விழுப்புரம்; மக்கள் போராளிகளை வரவேற்கத் தயார்!

1.5 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக சென்று பிரச்சாரம்  - உழைக்கும் மக்களின் கருத்தரங்குகள் - விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் - கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய வாகனப் பிரச்சாரம் - தெருமுனைக் கூட்டங்கள் என மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி மாநாடே காட்சியாக மாறியுள்ளது. கலை நிகழ்ச்சிகளின் தாக்கம் “சமூக ஒடுக்குமுறை தகரட்டும், சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்!” என்ற முழக்கத்துடன் புதுச்சேரி சப்தர் ஹஷ்மி, கல்லை குறிஞ்சி, சேலம் மாங்குயில் கலைக் குழுக்கள் களமிறங்கின. 12 இடைக்கமிட்டிகள் மூலம் தினமும் 10 மையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய கலைப் பிரச்சாரம் மக்கள் மனங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

விழுப்புரத்தில் நடக்கவுள்ள கட்சி மாநில மாநாட்டுக்கான சுவர் விளம்பரங்கள்
24 வது மாநில மாநாடு

பெண்ணுரிமை காப்பதில் முன்னத்தி ஏர் சிபிஐ(எம்)…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை 1920இல் தாஷ்கண்ட் நகரத்தில் அமைக்கப்பட்ட போது அதில் இடம்பெற்ற ஏழு பேரில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் ஆட்சி செய்த மேற்கு வங்கம், கேரளம், திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலின சமத்துவத்துக்குப் பாதை போடப்பட்டது. மேற்கு வங்கத்தில் கூட்டுப்பட்டா, உள்ளாட்சிகளில் கூடுதல் பிரதிநிதித்துவம், கேரளாவில் பெண்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த குடும்பஸ்ரீ போன்ற திட்டங்கள், அடிமட்டத் திட்டமிடல், கடை ஊழியர்கள் உட்காரும் உரிமைச் சட்டம், திரிபுராவில் பழங்குடிப் பெண் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை சாத்தியமாகியுள்ளன. திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீதிபதி ஹேமா கமிட்டி மலையாளத் திரைத்துறையில் உருவாக்கப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட முயற்சி எடுக்கப்பட்டதில்லை. 33% இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க ஊசலாட்டமற்ற போராட்டத்தை சிபிஎம் நடத்தியது.

457523792 1027302112108014 2035451516732828001 N
24 வது மாநில மாநாடு

இடதுசாரி ஜனநாயக அணியை கட்டமைப்போம் !

சிபிஐ(எம்) திட்டத்தின் அடிப்படையில் பிரதான அபாயமாக உருவாகியுள்ள வகுப்புவாத சக்திகளை முறியடிக்கும் நோக்கத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடுகள் நடத்தி அவ்வப்போது நிலைகளுக்கு ஏற்ப நடைமுறை உத்திகளை உருவாக்குகின்றன. இந்த நடைமுறைக் கொள்கையை உருவாக்குவதற்கும் கட்சியின் அணிகளின் பங்கு பிரதானமானதாகும். 

457261061 1026520755519483 912731772479248720 N
24 வது மாநில மாநாடு

தமிழகமும் அடையாள அரசியலும்!

அடையாளத் திரட்டல் ஒடுக்கு முறைக்கு ஆளான மக்களிடையே தீவிரமாக வேலை செய்கிறது. சாதி ஒடுக்கு முறையை அகற்ற பட்டியலின மக்கள் தங்களது சாதி அடிப்படையில் அணிதிரளுமாறு தூண்டப்படுகின்றனர். ஒடுக்கு முறைக்கு எதிராக பட்டியல் இன மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவது ஜனநாயக போராட்டமாகும்.அதனை அடையாள அரசியல் திரட்டலாக மட்டும் பார்க்க இயலாது.இந்த வகையான அடையாள திரட்டலில் உள்ள சில நியாயமான கவலைகளை தன்னுள் உட்படுத்திக்கொள்ளும் திறன் மார்க்சியத்திற்கு மட்டுமே உண்டு.அதனால்தான் காலம் காலமாக வர்க்க ஒடுக்குமுறையுடன் இணைத்து சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக மார்க்சிஸ்ட்கள் வர்க்க ஒற்றுமையைக் கட்டி போராடி வந்துள்ளனர்

449077149 987142652790627 6392398323174541016 N
24 வது மாநில மாநாடுசெய்தி அறிக்கை

வியூகம் வகுக்க விழுப்புரத்தில் சங்கமிப்போம்!

எதிர்காலத்தில் பாஜகவை எதிர்த்த போராட்டத்தையும், இந்துத்துவா, மதவெறி கருத்தியலையும், தமிழ்த் தேசியம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் திசைதிருப்பல் வேலைகளையும், சாதிய அணி சேர்க்கை, சமூக ஒடுக்குமுறை போன்றவைகளில் கருத்தியல் ரீதியான வலுமிக்க போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்வதோடு, இடதுசாரி அணியினை வலுமிக்க அணியாகவும், இதற்கு அடிநாதமாக திகழும் சிபிஐ (எம்) கட்சியினுடைய சொந்த பலத்தை அதிகரிப்பதுமான கடமைகளை விழுப்புரம் மாநாடு நிறைவேற்ற உள்ளது. 

1 28 29 30 67
Page 29 of 67