செய்தி அறிக்கை

காவிரி உரிமைக்காக டெல்டா மாவட்டங்களில் பொதுவேலை நிறுத்தம்! மக்கள் பேராதரவோடு பெரும் வெற்றி! ஒன்றிய அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

Water Copy

காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகும் அரசியல் ஆதாயத்திற்காக செயல்பட்டுவரும் கர்நாடக அரசை கண்டித்தும், ஒன்றிய அரசின் பாராமுகமான வஞ்சகப் போக்கிற்கு எதிராகவும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்திருந்த பந்த் போராட்டம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைக்காக குரல் கொடுத்து உடன் நின்ற பொதுமக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

இதே பிரச்சனையில் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. அதனை பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று ஆதரித்துள்ளன. தமிழ்நாட்டு மக்களின் ஒன்றுபட்ட குரலுக்கு மதிப்பளித்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படியும், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய அரசும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.

(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu