மற்றவை

பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு… மின்நூல் வெளியீடு…

அன்பான தோழர்களே,

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நடைபெற்ற பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாட்டின் ஆவணங்களை தொகுத்து மின் நூலாக வெளியிடுகிறோம். 

பாலின சமத்துவம், பாலின நீதிக்கான போராட்டம் சமூக தளத்தில் நடந்தேறுகிற வேளையில் சுரண்டலற்ற சமூக அமைப்பை படைக்கிற போராட்டத்தோடு அது இணைக்கப்பட வேண்டும். அரசியலிலும், சமூக வாழ்விலும் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டுமானால், அதற்கான செயல்திட்டம் முக்கியம். சுரண்டலுக்கு முடிவுகட்டுவதும், சுரண்டலை நியாயப்படுத்தும் சித்தாந்தங்களை வீழ்த்துவதற்குமான புரிதல் அவசியம். மேலும், இந்தப் புரிதலை களச் செயல்பாடுகளோடும், போராட்டங்களோடும் இணைத்திட வேண்டும். சி.பி.ஐ(எம்), அந்தப் பாதையில்தான் தொடர்ந்து பயணிக்கிறது. சாத்தியமான நட்புச் சக்திகளோடு கைகோர்த்து இப்போராட்டத்தை வலுப்படுத்தவும் செய்கிறது. 

பெண்ணுரிமைப் பாதுகாப்பு என்ற மகத்தான இலக்கை நோக்கிய பயணத்தில் இந்த மின் நூலும் உரிய பங்காற்றும். 

இதற்காக உழைத்த, பிழை திருத்தம் பார்த்த தோழர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வாழ்த்துகள். பகிர்ந்து பரவலாக்கிடுவீர். 

கே.பாலகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர்,
சி.பி.ஐ(எம்)