இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)தமிழ்நாடு மாநிலக்குழு
இந்து முன்னணி என்கிற பெயரில், கட்டப்பஞ்சாயத்து செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் காடேஸ்வரா சுப்பிரமணியம் என்பவர், நெல்லை சாதி மறுப்புத் திருமணம் குறித்து அவதூறான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை மொத்தமுமே அபத்தக் குப்பையாக இருக்கிறது.
“இந்து முன்னணி” என்று பெயர் வைத்துக் கொண்டுள்ள அவர், ஓர் ‘இந்து’ ஆணுக்கும் ஓர் ‘இந்து’ பெண்ணுக்கும் நடைபெற்ற சாதி மறுப்பு காதல் திருமணத்தை சரி என்று சொல்ல இயலாதவராக, வெட்கங்கெட்ட முறையில் வெறுப்பை வெளியிட்டு விஷம் கக்கியுள்ளார். காரணம், பட்டியலின சமூகங்கள் மீது அவருக்கு இருக்கும் சாதிய ஆதிக்க வெறி உணர்வுதான். இவர்களைப் போன்றவர்கள் தங்கள் அமைப்பை இந்து முன்னணி என்று சொல்லிக் கொள்வதே ஒரு பம்மாத்துதான்.
சாதி ஆணவக் கொலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு வாய்ப்பு இருக்கும் ஒரு சூழலில், திருமணம் செய்து கொண்டோரை பாதுகாப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நடவடிக்கையை காடேஸ்வரா சுப்பிரமணியம், “கட்டப்பஞ்சாயத்து” என்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குள் நுழைந்தவர்களின் கைகளில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மணமக்கள் கிடைத்திருந்தால், இருவரின் உயிரும் பறிக்கப்பட்டிருக்கும் ஆபத்து இருந்ததை அவர் மறுக்க முடியுமா? அப்படி நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா?
அருகில் இருந்து பார்த்தவர் போல, அப்பெண்ணின் உறவினர்கள் மட்டும் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வந்ததாகச் சொல்கிறார். அங்கு வந்த ஜெயக்குமார் என்கிற கூலிப்படை நபருக்கும் பெண் வீட்டினருக்கும் ஏதேனும் உறவு முறை உண்டா? ஜெயக்குமார் கத்தியோடு வந்தது, சமரசம் பேசுவதற்காகவா? பிபின் என்ற காவலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம், பெண்ணையும் பையனையும் காவல்நிலையத்தில் ஒப்படைக்காதீர்கள்; எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டதையும், அந்த நபர் பெண் வீட்டாரின் வட்டித் தொழிலோடு சம்பந்தப்பட்டவர் என்பதையும் “கட்டப்பஞ்சாயத்து” காடேஸ்வரா சுப்பிரமணியம் மறுக்க முடியுமா?
எனவே, வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொள்ளமாட்டார்களா; அதில் புகுந்து ஏதேனும் காசு பார்க்க முடியாதா என்ற நப்பாசையுடன் காடேஸ்வரா சுப்பிரமணியம் போன்ற விஷமிகள் வெறிபிடித்து திரிகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியையும் தமிழ்நாடு அரசாங்கத்தையும் இடையிடையே சேர்த்து அறிக்கை என்கிற பெயரில்