ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசட்டமன்றம்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மத்தியக் குழுமாநிலக் குழு

சிபிஐ(எம்) அரசியல்தலைமைக்குழுஅறிக்கை

Cpim 2 Copy

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் ஆகஸ்ட் 6 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;

வயநாடு துயரம்

இயற்கை பேரழிவுகள் கேரளாவைத் தாக்கும் நேரங்களில் மக்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக நின்று சவால்களை எதிர்கொள்கிறது. கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, மறுவாழ்வுக்காக மேற்கொண்டு வரும் விரிவான முயற்சிகளும், மக்களின் பணிகளும் பாராட்டுக்குரியவை.

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சர் பரப்பிய தவறான  பிரச்சாரத்தை அரசியல் தலைமைக் குழு கண்டிக்கிறது. அவர் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது வெளிப்பட்டுள்ளது.

சி.பி.ஐ(எம்) சார்பில் தனி வங்கிக் கணக்குடன் நிறுவப்பட்டுள்ள வயநாடு நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை அளிக்குமாறு அரசியல் தலைமைக் குழு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

வங்கதேசம்: மக்கள் எழுச்சி

வங்க தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவும், அவரது அரசாங்கமும் நடத்திவந்த அதிகாரத்துவமும், ஊழலும் நிறைந்த ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய பெருந்திரள் கிளர்ச்சியின் விளைவாக அகற்றப்பட்டுள்ளனர். பெருந்திரள் போராட்டங்களுக்கு எதிரான கொடூரமான அடக்குமுறையால் உயிரிழந்த 300-க்கும் மேற்பட்ட உயிர்களுக்கு அரசியல் தலைமைக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

அமைதியையும், நிலைத்தன்மையையும் மீட்டெடுக்க ஜனநாயக – மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வெளி ஆதரவுடன் பயனடைய முயலும் வலதுசாரி மற்றும் அடிப்படைவாத சக்திகளின் திட்டங்களை முறியடிக்க இது அவசியமாகும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புபட்டியல் சாதி உள் ஒதுக்கீடு குறித்து

பட்டியல் சாதிகளுக்கான உள் ஒதுக்கீடு குறித்த, தெளிவான வழிகாட்டுதல்களின் அடிப்படையிலான‌ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை (6-1) அரசியல் தலைமைக்குழு ஆதரித்துள்ளது. அதே நேரத்தில், செயல்படுத்தக்கூடிய தீர்ப்பின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், ஏழு நீதிபதிகளில் நான்கு பேர் பட்டியல் சாதி இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக தனித்தனியே கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் அறிமுகப்படுத்துவதற்கு கட்சியின் எதிர்ப்பை அரசியல் தலைமைக்குழு மீண்டும் ஒருமுறை பதிவு செய்கிறோம்.

பிரிவினை விதைக்கும் பாஜகவின் தொடர் முயற்சிகள்

மோடி மற்றும் பாஜக விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, என்டிஏ கூட்டணி அரசாங்கத்தையே அவர்கள் தலைமை தாங்குகின்றனர். அனால், உண்மைக்கு மாறாக, எதுவும் மாறாதது போலவும் ‘வழக்கம் போல் செயல்பாடு’ என்ற முறையில் மோடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

பாஜகவிற்கு பெரும்பான்மை உள்ள மாநிலங்களில், சிறுபான்மையினரை வெளிப்படையாக குறி வைக்கும் புதிய சட்டங்களை பாஜக இயற்றி வருகிறது, இதன் மூலம் சமூக பிரிவினையை தீவிரப்படுத்துகிறது.

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் அரசுகள் கான்வர் யாத்திரை பாதையில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் தெரு வியாபாரிகள் தங்கள் கடைகளில்  பெயர்ப் பலகைகளை வைக்க  வேண்டும் என்று அறிவித்தன. இது சிறுபான்மையினரை குறி வைத்து பிரிவினையை தீவிரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.  உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவின் அமலாக்கத்தை நிறுத்தி வைத்தது நல்ல வாய்ப்பாகும்.

உத்தரப்பிரதேச அரசு சட்டவிரோத மத மாற்றம் (திருத்தம்) மசோதா, 2024ஐ கொண்டு வந்துள்ளது, இது தெளிவாக இருவேறு மதங்களுக்கு இடையிலான திருமணங்களை குறி வைத்து, ஏற்கனவே இருந்த தண்டனையை பத்து ஆண்டுகளில் இருந்து ஆயுள் சிறைத்தண்டனையாக அதிகரித்துள்ளது.

அசாமில், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையிலான நில விற்பனையை ‘நில ஜிஹாத்’ என்று கூறி தடுக்க ஒரு சட்டம் பரிசீலிக்கப்படுகிறது. இத்தகைய பரிவர்த்தனைகள் முதலமைச்சரின் அனுமதியுடன் மட்டுமே நடைபெற முடியும் என்கிறது. உத்தரப்பிரதேசத்தைப் போல ‘லவ் ஜிஹாத்’ என்று கூறப்படும் சமூகங்களுக்கு இடையிலான திருமணங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கவும் அவர் பரிசீலித்து வருகிறார்.

மகாராஷ்டிரா பாஜக தலைமையிலான அரசு, நகர்ப்புற நக்சலிசத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில்,  அனைத்து எதிர்ப்புகளையும் குற்றமாக்கிடும் விதத்திலான மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது, இது UAPA-வை விட கொடூரமானது.

24வது அகில இந்திய மாநாடு

சிபிஐ(எம்) 24வது அகில இந்திய மாநாட்டை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் 6 வரை தமிழ்நாட்டின் மதுரையில் நடத்துவதற்கு அரசியல் தலைமைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.