மாநில செயற்குழு

ஆய்வறிஞர் ராஜ் கவுதமன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

Maraivu

எழுத்தாளரும், இலக்கிய, சமூக, பண்பாட்டுத்துறை ஆய்வாளருமான பேராசிரியர் ராஜ் கவுதமன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை புதிய கோணத்தில் ஆய்வு செய்து அவர் வெளியிட்டுள்ள நூல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வள்ளலார், அயோத்திதாசர் உள்ளிட்ட சமூக சீர்திருத்த ஆளுமைகளின் படைப்புகளையும், செயல்பாடுகளையும் ஆய்வு செய்து முக்கியமான மதிப்பீடுகளை முன்வைத்தவர். பல்வேறு நூல்களை அவர் மொழி பெயர்த்துள்ளார். நாவல்கள், சிறுகதைகள் என படைப்பிலக்கியத்துறையிலும் அவர் முக்கியமான பங்களிப்புகளை செய்துள்ளார்.  பேராசிரியர் ராஜ் கவுதமன் மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.  கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்

Leave a Reply