மாநில செயற்குழு

சாகித்திய அகாதெமி விருது பெற்ற பேராசிரியர் வேங்கடாசலபதிக்கு சிபிஐ(எம்) வாழ்த்து

Cpimk State

2024 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது, ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” ஆய்வு நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றுள்ள பேராசியர் வெங்கடாசலபதி அவர்களுக்கு சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியாவின் முக்கியமான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியும், சுதேசி சிந்தனையின் அடையாளமும் ஆன  வ.உ.சிதம்பரனாரின் வரலாற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியவர் வேங்கடாசலபதி. தனது ஆய்வுகளின் வழியாக, வ.உ.சி புகழை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்ற தீராத தாகம் கொண்ட அவர், தனது ஆய்வு நூலுக்காக பெற்றிருக்கும் இந்த விருதின் மூலம் வ.உ.சியின் வரலாறு மேலும் பரவலாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வளர்ச்சி  ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிவரும் அவருடைய 40 ஆண்டுகால ஆய்வுப் பணிக்கு இந்த விருது மதிப்பு சேர்த்துள்ளது. எடுத்துக் கொண்ட பணியை மென்மேலும் ஊக்கத்தோடு முன்னெடுக்க வேண்டும் என சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழுவின் சார்பில் வாழ்த்துகிறோம்.

(கே.பாலகிருஷ்ணன்)

மாநில செயலாளர்

Leave a Reply