தீர்மானம் 13
தமிழ்நாடு தொழில் வளர்ச்சியாலும், உற்பத்தியாலும் இந்திய அளவில் முதல் வரிசையில் உள்ள மாநிலமாகும். தொழில் வளர்ச்சியில் மின்சாரம், பாய்லர் எஃகு ஆகியவை முக்கிய பங்கு வைக்கிறது. மின்சார உற்பத்தியில் முக்கிய இடம்பெற்றுள்ள நெய்வேலி உருவானதில் கம்யூனிஸ்ட் கட்சியின் அதன் தலைவர்கள் பி.ராமமூர்த்தி மற்றும் ஏ.கே.கோபாலன் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். பாய்லர் உற்பத்தி நிறுவனமான திருச்சி பெல் ஜெர்மன் நிறுவனமான சீமென்ஸ்க்கு விற்கப்பட இருந்ததை தடுத்த வரலாறு மார்க்சிஸ்ட் கட்சிக்கு உண்டு. சேலம் ஸ்டீல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை பார்க்கும் முயற்சியை தடுத்ததிலும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு முக்கிய பங்கு உண்டு.
தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கவும் அத்தொழிலை பாதுகாக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மிகப்பெரிய பங்களிப்பை செய்ததுடன் களத்திலும், தொழில்களைப் பாதுகாக்கும் அரணாக செயல்பட்டு வருகிறது. தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கத்திற்கு பின் பொதுத்துறை பங்குகளை விற்பதையும் ஒன்றிய அரசு செய்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு பின் புதிதாக பொதுத் துறை நிறுவனம் எதுவும் உருவாக்கப்படவில்லை. தமிழ்நாட்டை புறக்கணிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய பாஜக அரசை மார்க்சிஸ்ட் கட்சி கண்டிப்பதுடன் புதிய பொதுத்துறைகளை உற்பத்தி துறையில் துவக்க முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பது, மாநில அரசுகளுக்கு இடையிலான போட்டியாக மாறி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்நிய நேரடி முதலீடு வேலைவாய்ப்பை அதிகப்படுத்த உதவும் புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதாகும் இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இதற்கு மாநில அரசுகளால் நடத்தப்படும் உலக முதலீட்டாளர் மாநாடுகள் தமிழக வளங்களை வரிசலுகைகளை அனுபவிப்பதாக உள்ளது. நிரந்தரமற்ற வேலைவாய்ப்பு மூலம் சுரண்டலை தீவிர படுத்துவதாக உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக மேற்கொள்வது அவசியம்.
இதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கையை ஒன்றிய அரசும், மாநில அரசும் வெளியிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் செயல்படுத்த வேண்டும். மாநில அரசு தமிழ்நாட்டில் செயல்படாமல் உள்ள கூட்டுறவு சர்க்கரை மற்றும் ஆலைகளை புனரமைப்பது வேண்டும் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான சேது கால்வாய் திட்டம் செயல்படுத்த ஒன்றிய பாஜக அரசு கொள்கை தடையாக உள்ளதை ஜனநாயக சக்திகள் எதிர்த்து போராட முன்வர வேண்டும், மதுரையில் AIMS நெய்ப்பர் போன்றவை ஒன்றிய அரசினால் திட்டமிட்டு முறையில் புறக்கணிக்கப்படுவதும் எதிர்த்து போராட வேண்டியது அவசியம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான மேற்குறிப்பிட்ட அடிப்படை கட்டமைப்பு உருவாக்கும் அழுத்தத்தை ஜனநாயக சக்திகள் வலுவாக ஒன்றிணைந்து போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநாடு அறைகூவி அழைக்கிறது
முன்மொழிந்தவர் எல்.சுந்தர்ராஜன் ( வடசென்னை
வழிமொழிந்தவர் ஏ.வி.சிங்கராவேலன் ( வாலிபர் சங்கம்)