தீர்மானங்கள்

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக தமிழக குழந்தைகள் நல ஆணையத்திற்கு தலைவரை நியமித்திடுக.

Cpim 7

இந்தியாவில் வன்முறையே வாழ்வாக மாறிவிட்ட மோசமான நிலையில் பெண்கள் உள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. எத்தனை சட்டங்கள் வந்தாலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியதாகவே உள்ளது.

18 வயதிற்கு முன்பு திருமணம் கூடாது என்ற சட்டம் இருந்தாலும் குழந்தை திருமணங்கள் அன்றாடம் நடந்து கொண்டே உள்ளன. வரதட்சணை ஒழிப்புச் சட்டம் உண்டு .ஆனால் வரதட்சணை கொடுமை நின்றபாடில்லை. ஒரு பெண் வீட்டிற்குள் இருந்தாலும் வன்முறை. பொது வெளிக்கு சென்றாலும் வன்முறை. காதலித்தால் படுகொலை. காதலிக்க மறுத்தால் அமில வீச்சு. விஞ்ஞானம் வளர்ந்தாலும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு பஞ்சமே இல்லை. இந்தியாவின் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் 90% தெரிந்தவர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.இந்தியாவில் 2023 ல் மட்டும் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் 3, 65,100 ம் குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகள் 63,414-ம் பதிவாகியுள்ளன.

குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகள் கடந்த 10ஆண்டுகளில் 93% உயர்ந்துள்ளன. உதாரணமாக 2021 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் 12,653. ஆனால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் 635. இது பெரும்பாலான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுவதையே காட்டுகிறது.

இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் மூன்றில் ஒன்று குழந்தை திருமணம்.கடந்த ஆண்டை விட குழந்தை திருமணங்கள் 50 சதம் இந்தியாவில் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு 1054 குழந்தை திருமணங்களும் 2024 ஆம் ஆண்டு 1640 குழந்தை திருமணங்களும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. சிறு வயது பிரசவங்கள் குழந்தைகளின் ஆயுட்காலத்தை குறைக்கின்றன. கல்வி வாய்ப்பை தட்டிப் பறிக்கின்றன. இத்தகைய குற்றங்கள் காவல்துறை மற்றும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது அவற்றை அலட்சியமாக பார்க்கும் போக்கும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதும் ஆட்சியாளர்களின் வாடிக்கையாகி விட்டன. பல வழக்குகளில் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். கோவை ஈஷா யோகா மையத்தில்மர்மமான முறையில் காணாமல் போகும் பெண்கள் சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலைக்கு சென்ற 15 வயது குழந்தை கொடூரமான முறையில் படுகொலை,அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் என தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

பண்பாட்டுத்தளத்திலும் பெண்ணடிமைத்தனம் போற்றி பாதுகாக்கப்படுகின்றன. பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் முறையாக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. மறுபுறம் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இந்தியாவிலும் தமிழகத்திலும் நடந்து கொண்டிருக்கும் இத்தகைய குற்றங்களை தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த குழந்தைகள் தமிழக குழந்தைகள் நல ஆணையத்திற்கு உடனடியாக தலைவரை நியமித்திட வேண்டும்.பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை சட்டத்திற்கு உட்பட்டு நீதிமன்ற வழிகாட்டுதல் படிகையாளுவதற்கான வகுப்புகளை காவல்துறை அதிகாரிகளுக்கு அரசு நடத்திட வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளுக்கு பாலின சமத்துவம் குறித்த வகுப்புகளை அரசே நடத்திட வேண்டும். பாலியல் கல்வி குறித்தும் பாடத்திட்டங்களில் இடம்பெற வேண்டும் எனவும், இம்மாநாடு கோருகிறது.

முன்மொழிந்தவர்எஸ்.வாலண்டினா

வழிமொழிபவர்கோ.அரவிந்தசாமி (மாணவர் சங்கம்)

Leave a Reply