தீர்மானங்கள்

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் நோக்கங்களை குலைக்காமல் செம்மையாக செயல்படுத்திடுக !

தீர்மானம் 6

மகாத்மா காந்தி தேசியஊரகவேலைஉறுதிஅளிப்புத்திட்டம் 2005 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியின் போது இடதுசாரிகளின் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாக நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின் தொடக்ககாலம் வரை ஊரக வேலை திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில் இரண்டு சதவீதத்திற்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பெரும்பாலான தொழிளாளர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை ஒழிக்கும் நோக்கத்தில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக் காலத்தில் படிப்படியாக சிதைத்து, நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கி  1.64 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற வஞ்சக நோக்கத்துடன், ஆதார் எண் இணைப்பு இல்லாத தொழிலாளர்களை செயல்படாதவர்கள் என பட்டியல் தயாரித்து, வேலை அட்டை பெற்ற  25 கோடி பயனாளிகளின் எண்ணிக்கையை ஏறக்குறைய சரிபாதியாக  (13 கோடியாக ) பாஜக அரசு குறைத்துள்ளது.

தமிழ்நாட்டில் 93 லட்சத்திலிருந்து சுமார் 80 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.சாதி ரீதியான வேலை, சாதி ரீதியான சம்பளம் என ஊரக வேலைத் திட்டத்தின் பயனாளிகளான உழைக்கும் மக்களை மோதவிடும் முயற்சியையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல்,  அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நீர் நிலைகளை தூர் வாரும் பணிகளை தடை செய்யப்பட்ட பணிகளாகவும், இதனையும் மீறி வேலை வழங்கும் பட்சத்தில் அதற்குரிய  கூலித் தொகையினை கண்டிப்பாக வழங்க இயலாது எனவும் மாநில அரசுகளை ஒன்றிய அரசு மிரட்டுகிறது.

இதனால்நாடு முழுவதும்வேலை குறைக்கப்பட்டு ஒவ்வொரு பணிகளும் 5 முதல் 10 தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை அளிக்கும் வகையிலான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருவதால், இத்திட்டத்தில் பின்னடைவையும், வேலையிழைப்பையும்,  வருவாய் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஊரக வேலை திட்டத்தை பல்வேறு வகைகளில் சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசை 24 வது மாநில மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில், ஊரகவேலைத் திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்புத் தொகையை தொடர்ச்சியாக உயர்த்தும் மாநில அரசின் முயற்சி பாராட்டத்தக்கது. இருப்பினும் திட்டத்தை செயல்படுத்தும் முழுமையான பொறுப்பு மாநில அரசை சார்ந்தது என்ற அடிப்படையில், இன்னும் கூடுதலான, ஆக்கப்பூர்வமான தலையீட்டை செய்திட வேண்டும்.

குறிப்பாக முழுமையாக வேலை, கூலி கிடைக்கவும்,  மாற்றுத்திறனாளிகளுக்கு  4 மணி நேரம் வேலை அளவு தீர்மானிக்க வேண்டும். ஜியோ டெக் காலவரம்பை 8 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும். வேலை இல்லா கால நிவாரண தொகை வழங்கிட வேண்டும்.

தொலை தூர பகுதிக்கு வேலைக்கு செல்லும் பயனாளிகளுக்கு பயனப்படியை உத்தரவாதப்படுத்த வேண்டும். 

சட்டத்திற்குப் புறம்பாக எந்திர பயன்பாட்டிற்கும், ஒப்பந்தக்காரர்களின் தலையீட்டிற்கும் வழிவகுக்கும் கட்டுமான பணிகளை தேர்வு செய்து செயல்படுத்துவதை தவிர்க்கவேண்டும். செலவிடும் தொகையில் 60 சதவீதம் ஊதியத்திற்கும், 40 சதவீதம் பொருட்களுக்கும் என்ற விகிதாசாரம் கறாராக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

விவசாயம் முழுமையாக எந்திரமயமாக்கப்பட்டுள்ளதால் கிராமப்புற வேலையின்மைக்கும் , விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் பிரிவினர் இதனால் பெரும் வருமான இழப்பிற்கும் உள்ளாகியுள்ளனர். பல மடங்கு உயர்ந்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அவர்களின் வாழ்க்கையை நசுக்குகிறது.

கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடித்து அவர்களுக்கு பல லட்சம் கோடியைத்  தாரைவார்க்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள்,வேலையில்லா திண்டாட்டத்திலும், வறுமை மற்றும் நுண் நிறுவன கடன் பிடியில்  தவிக்கும் கிராமப்புற ஏழைகளுக்கு வேலை அளிக்கும்   ஊரக வேலை திட்டத்திற்கு குறைந்தபட்சம் 4 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திட வேண்டும். தினக்கூலியை 600

 ரூபாயாகவும், வேலை நாட்களை 200 நாட்களாகவும் உயர்த்திட வேண்டும். கிராமப்புற தன்மை கொண்ட பேரூராட்சி பகுதிகளுக்கும்  வேண்டுமென ஒன்றிய அரசை 24 ஆவது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிந்தவர் – வீ.அமிர்தலிங்கம்

வழிமொழிந்தவர் – தமிழ்ச்செல்வி (தஞ்சை)

Leave a Reply