ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு 5.2.2025 அன்று நடைபெறும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திரு வி.சி. சந்திரகுமார் அவர்கள் போட்டியிடுகிறார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளப் பெருமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > தீர்மானங்கள் > மாநில செயற்குழு > ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வாக்காளப் பெருமக்களுக்கு சிபிஐ(எம்) வேண்டுகோள்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வாக்காளப் பெருமக்களுக்கு சிபிஐ(எம்) வேண்டுகோள்!
posted on