மாநிலக் குழு

தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக!

44

தூத்துக்குடி நகரில் உள்ள என்.டி.பி.எல் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம், என்.எல்.சி யின் 89 சதமான பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்வாரியம் 11 சதம் பங்களிப்பு செய்து வருகிறது. இதில் 24 தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தர பணியாளர்களாகவும், 1374 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.

                பல ஆண்டுகளுகளாக பணி செய்த பின்னரும் நிரந்தரம் செய்யப்படவில்லை. அதேபோல் என்.எல்.சி நிறுவனத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விடவும், என்.டி.பி.எல் நிறுவனத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ 300 அளவில் குறைவாக வழங்கப்படுகிறது. ஒரே வேலையைச் செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரே நிறுவனம் பாரபட்சமான ஊதியம் வழங்குவதற்கு எதிராகவும் கோரிக்கை வைத்து, சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது 22 நாட்களாக வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. கடைசியில் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தை கைவிட்டால், பேச்சுவார்த்தை நடத்த முன் வருவதாக தொழிலாளர் துறையில் தெரிவித்து உள்ளது. இது குறைந்தபட்ச அளவில் கூட தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமையை அனுமதிக்காத போக்கு ஆகும். இதுவும் கண்டனத்திற்குரியது ஆகும்.

மத்திய தொழிலாளர் துறை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை அமலாக்காமல், நிர்வாகம் மேல் முறையீடு செய்துள்ளது. இது தொழிலாளர்களை வஞ்சிக்கும், உழைப்பு சுரண்டலை தீவிரமாக அமலாக்கும் செயல் ஆகும். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. தொழிலாளர் துறையும், நீதிமன்றமும் வழங்கியுள்ள தீர்ப்புகளை அமலாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

Leave a Reply