17.11.2025
பெறுநர்
திருமிகு. தலைமைச் செயலாளர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
அன்புடையீர்! வணக்கம்.
தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிடுமாறு மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது தொடர்பாக 06.11.2025 அன்று தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் கட்சியின் கருத்துக்களை தெரிவித்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக எங்கள் கட்சியின் சார்பில் அரசு கேட்டுக்கொண்ட அடிப்படையில் கீழ்க்கண்ட கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பிறகு “பொதுநலன் என்ற பெயரில் போராடுவதற்கும், இயக்கங்கள் நடத்துவதற்கும், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குமான இடங்கள் அநேகமாக சுருக்கப்பட்டு வருகின்றன. போராட்டத்தின் மிக முக்கியமான அம்சம், தங்கள் கருத்தை இதர பகுதி மக்களுக்கு கொண்டு செல்வது. மற்றும் தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான வடிவம் வேண்டும். ஆனால், சமீப காலமாக இடம், நேரம் மற்றும் இதர கட்டுப்பாடுகளால் இத்தகைய இயக்கங்கள், போராட்டங்கள் மூலம் மக்களை சந்திக்கும் வாய்ப்பினை மறுக்கும் விதத்தில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இத்தகைய பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், இயக்கங்கள் பெரும்பாலும் மக்களுக்கு இடையூறின்றியோ அல்லது குறைந்த அளவு சிரமங்களுடனோ நடத்தப்பட வேண்டும் என்பதில் எங்கள் கட்சிக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது. ஆனால், இதற்கு முன்பிருந்தே, தொழிலாளிகள், விவசாயிகள், சிறு வணிகர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டு சமூகத்தின் பல்வேறு பகுதியினர் போராட அனுமதி பெறுவதற்கே காவல்துறையிடம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. அது, ஜனநாயகப் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு கண்ணோட்டத்தில் மட்டும் குறுக்கிப் பார்ப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
“உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ற பெயரில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குகிறோம்” என அரசு கூறி, இந்நடைமுறைகளை செயல்படுத்தும் நோக்கில் கருத்துக் கேட்பது, மக்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு சுணக்கம் காட்டுகிறதோ என்ற ஐயம் தோன்றுகிறது.
ஏனெனில், தமிழ்நாட்டின் பொது இடங்களில், அரசு நிலங்களில் அமைக்கப்பட்ட சிலைகளை அகற்றவும் அது குறித்து விரிவான வழிகாட்டு முறை உருவாக்க உயர்நீதிமன்றம் 7.10.2021 அன்று W.P.NO. 23140 of 2014-ன் வழக்கில் உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசு சீராய்வு ((Review)) மனு தாக்கல் செய்து, அது நிலுவையில் உள்ளது.
அதுபோலவே, இந்நெறிமுறைகளுக்குக் காரணமாகச் சொல்லப்படும் வழக்கிலும், அரசு மேல்முறையீடு அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தற்போது பல சட்டவிதிகள் உள்ளதால் அதற்கு மேல் விதிகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்ற அடிப்படையில், உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் பிரமாண வாக்குமூலம் அளித்திட வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
06.11.2025 அன்று வழங்கப்பட்ட Draft Guidelines (வழிகாட்டு நெறிமுறைகள்), சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் பெயரில், அரசியல் சட்டத்தின் அடிப்படை (Articles 14, 19(1)(a), 19(1)(b), 19(1)(c) மற்றும் 21) மீறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை பாதுகாப்பு நோக்கில் ஒழுங்குபடுத்துவது சட்டபூர்வமாக இருக்கலாம்; ஆனால், இவ்வரைவுக் கையேடு, முன்சோதனை (Pre-censorship), நிதி அடிப்படையிலான பாகுபாடு, மற்றும் சொல், சிந்தனை, மற்றும் அமைதி கூட்டு சுதந்திரத்தை மீறல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மாநில அரசின் கடமை என்பது, குடிமக்களின் சட்டபூர்வமான ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்துவதற்கு உதவ வேண்டுமே தவிர தடுப்பதோ அல்லது சிக்கலாக்குவதோ அல்ல.
அரசு வெளியிட்டுள்ள அல்லது வரைவு நிலையில் உள்ள “பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள், ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP)” என்பன வெளிப்படையாகச் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவை நடைமுறையில் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கு (Fundamental Rights) நேரடியான, தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த நெறிமுறைகள் மக்களின் பேச்சு சுதந்திரம், அமைதியான முறையில் கூடும் சுதந்திரம், சிந்தனை வெளிப்பாடு, அரசியல் உரிமைகள் போன்றவற்றை மிகைப்படியான, அநியாயமான மற்றும் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளால் அடக்குகின்றன. வழிகாட்டு நெறிமுறைகளின் நோக்கம் ;
“பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்தி கண்காணித்தல்” என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கம், உண்மையில் அடிப்படை உரிமையான சுதந்திரமான கருத்துரைத்தல் மற்றும் அமைதியான கூடுகை உரிமைக்கு எதிரான நிர்வாகக் கட்டுப்பாடாகும். நிர்வாகக் கட்டுப்பாடு ஒரு போதும் இந்திய அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருக்கக் கூடாது.
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள்:
(அ) உறுப்பு 19(1)(a)) – கருத்து தெரிவிக்கும் சுதந்திரம்
மக்கள் தங்கள் கருத்துகளைச் சொல்வதற்கும், அரசியல் பார்வைகளை வெளிப்படுத்துவதற்கும் உரிமை பெற்றுள்ளனர்.
(ஆ) உறுப்பு 19(1)(b) – ஆயுதமற்ற அமைதியான முறையில் கூடும் சுதந்திரம் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், ரோடு ஷோ ஆகியவை இத்தகைய உரிமையின் வெளிப்பாடு ஆகும்.
(இ) உறுப்பு 19(1)(c) –- சங்கங்கள் / அரசியல் கட்சிகள் உருவாக்கும் உரிமை, அரசியல் கட்சிகள் அல்லது சமூக இயக்கங்கள் பொதுக்கூட்டங்கள் மூலம் தங்கள் நோக்கங்களைப் பகிர்ந்து கொள்வது இவ்வுரிமையின் ஒரு பகுதி.
(ஈ) உறுப்பு 21 – தனி மனிதனின் வாழ்க்கை மற்றும் சுதந்திர உரிமை ஒருவர் தன்னார்வமாக பொதுவெளியில் கலந்து கொள்வதும், கருத்தை வெளிப்படுத்துவதும் அவரின் தனிநபர் சுதந்திரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
3. அரசியலமைப்பில் அனுமதிக்கப்படும் நியாயமான கட்டுப்பாடுகள் (Reasonable Restrictions)
உறுப்பு 19(2) மற்றும் 19(3) and 19(4) to 19(6) படி சில நியாயமான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்படலாம். அவை:
* இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு
* அரசின் பாதுகாப்பு
* பொது ஒழுங்கு (Public Order)
* ஒழுக்கம் அல்லது நாகரிகம் (Morality)
* இவற்றைத் தாண்டி விதிக்கப்படும் எந்தக் கட்டுப்பாடும் “நியாயமற்றது” (Unreasonable Restriction)எனக் கருதப்படும்.
* 19(1)(a) மற்றும் 19(1)(b)-ன் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையும் அமைதியான கூட்டம் நடத்தும் உரிமையும் உண்டு.
* அரசு இந்த உரிமைகளில் “நியாயமான கட்டுப்பாடுகள்” விதிக்க முடியும், ஆனால் அது பிரிவு 19(2) மற்றும் 19(3)-ன் கீழ் சட்டத்தின் மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
* சட்ட அடிப்படை இன்றி நிர்வாகச் சுற்றறிக்கை (SOP) வழியாக விதிக்கப்பட்டுள்ள இத்தகைய கட்டுப்பாடுகள் சட்டத்தை மீறிய (ultra vires) நடவடிக்கையாகும்.
நீதிமன்ற உத்தரவு தவறாகப் பொருள்படுத்தப்பட்டது:
* நீதிமன்றத்தின் உத்தரவு தேர்ந்தெடுத்தவாறு தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் அரசுக்கு அரசுப் பொருட்களின் பாதுகாப்பிற்கான வெளிப்படையான நடைமுறைகள் வகுக்க உத்தரவிட்டது; பொதுக்கூட்டங்களுக்கு நிதி அல்லது நடைமுறை தடைகள் விதிக்க அல்ல.
* ஒழுங்குபடுத்தும் அதிகாரம் என்பதே தடை விதிக்கும் அதிகாரம் அல்ல. நீதிமன்ற உத்தரவை அரசியல் சட்ட வரம்புக்குள் மட்டுமே நிறைவேற்ற முடியும்.
வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றும் அதிகாரம்
* அரசு எந்த நேரத்திலும் கலந்தாலோசனையின்றி வழிகாட்டுதல்களை மாற்றலாம் என்கிறது; இது வெளிப்படைத்தன்மையற்றது மற்றும் அரசியல் சட்டத்திற்கு முரணானது.
* எந்த மாற்றமும் பொதுமக்கள் அறிவிப்பு, கலந்தாய்வு, மேலும் சட்டமியற்றும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் கண்காணிப்பின் வழியாகவே செய்யப்பட வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகளின் பொருந்தல்
* இத்தகைய SOP-ஐ 5,000 பேரைத் தாண்டும் அரசியல் மற்றும் சமூக கூட்டங்களுக்கு மட்டும் பொருந்துமாறு செய்வது, பாகுபாட்டுத் தன்மை கொண்ட வகைப்படுத்தல் (class discrimination) ஆகும்.
* அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14-ன் கீழ், சட்டத்தின் முன் சமத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்க நிகழ்வுகள் மற்றும் மதச் சடங்குகள் விலக்கப்பட்டு, அரசியல் கூட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிப்பது சமத்துவ உரிமைக்கு எதிராக உள்ளது.
* பொதுக்கூட்டம் எண்ணிக்கை அடிப்படையில் அல்லது தெரிவு செய்யப்பட்ட வகையில் கட்டுப்படுத்தப்பட முடியாது; இது மனப்போக்கு சார்ந்த (arbitrary) நடவடிக்கையாகும்.
பாதுகாப்புத் தொகை
* அரசியல் கூட்டம் நடத்துவதற்காக “பாதுகாப்புத் தொகை” செலுத்த கட்டாயப்படுத்துவது, அரசியல் பங்கேற்பு உரிமையை பணத்தின் அடிப்படையில் அளவிடும் செயலாகும்.
* ரூபாய் 20 லட்சம் வரை வைப்பு தொகை கேட்பது, சிறிய அரசியல் கட்சிகளையும் பொதுமக்களையும் அரசியல் பங்கேற்பிலிருந்து விலக்குகிறது.
* இதற்கான எந்தச் சட்ட அங்கீகாரமும் இல்லை; எனவே இது பிரிவு 19(1)(a), 19(1)(b) மற்றும் 21 (நியாயமான நடைமுறை உரிமை)-க்கு எதிராகும்.
* “நியாயமான கட்டுப்பாடு” பணம் சார்ந்த நிபந்தனையாக இருக்க முடியாது.
* முன்கூட்டியே எழுத்துப்பூர்வமான அனுமதி மற்றும் பல துறை சான்றுகள் கேட்பது, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமையை “அனுமதி சார்ந்த சலுகை”யாக மாற்றுகிறது. இது PPD சட்டத்திற்கு விரோதமானது.
* அமைதியான கூட்டம் நடத்துவது, முன் அனுமதி பெறுவதை சார்ந்தது அல்ல. மக்கள் அமைதியாக கூடுவதால் “பொது அமைதி குலையும் அபாயம்” தெளிவாக இல்லாவிடில் அனுமதி மறுப்பது சட்டவிரோதம். இத்தகைய முன் தடை (Prior Restraint) பிரிவு 19(1)(a) மற்றும் 19(1)(b)-க்கு விரோதமாகும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கால வரம்பு
10 – 30 நாட்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம், அரசியல் கருத்து வெளிப்பாட்டின் தன்னிச்சையான தன்மையை ஒடுக்குகிறது. இதுவரை, காவல் சட்டத்தின் பிரிவு 30(2) மற்றும் தொடர்புடைய விதிகளின் அடிப்படையில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன. எனவே, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அவசியமற்றவை என்றும், அவை தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படைச் சிந்தனைகளுக்கு முரணாக உள்ளன என்றும் எங்கள் ஆட்சேபணையில் வலியுறுத்துகிறோம்.
The Police Act, 1861
Section-30. Regulation of public assemblies and processions and licensing of the same.
(1) The District Superintendent or Assistant District Superintendent of Police may, as occasion requires, direct the conduct of all assemblies and processions on the public roads, or in the public streets or thoroughfares, and prescribe the routes by which, and the times at which, such processions may pass.
(2) He may also, on being satisfied that it is intended by any persons or class of persons to convene or collect an assembly in any such road, street or thoroughfare, or to form a procession which would, in the judgment of the Magistrate of the district, or of the sub-division of a district, if uncontrolled, be likely to cause a breach of the peace, require by general or special notice that the persons convening or collecting such assembly or directing or promoting such procession shall apply for a licence.
(3) On such application being made, he may issue a licence specifying the names of the licensees and defining the conditions on which alone such assembly or such procession is to be permitted to take place and otherwise giving effect to this section:
Provided that no fee shall be charged on the application for, or grant of, any such licence.
(4) Music in the streets.—He may also regulate the extent to which music may be used in the streets on the occasion of festivals and ceremonies.
* திடீர் அரசியல் கூடுகை (spontaneous assembly) என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
* அதிக கால முன்கூட்டிய அறிவிப்பை கட்டாயமாக்குவது பிரிவு 19(1)(a)-க்கு எதிரானது.
சாலை ஊர்வலங்கள் (Road Shows)
* பாதை அங்கீகாரம், தடுப்புச்சுவர், பொது பணித் துறை சான்றிதழ் போன்றவற்றை கட்டாயப்படுத்துவது, அரசியல் வெளிப்பாட்டை நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் முயற்சியாகும்.
* பொது இடங்களில் அமைதியாக நகரும் உரிமை மற்றும் கூடுகை உரிமை பிரிவு 19(1)(b) மற்றும் 19(1)(d)-ன் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
* இத்தகைய நிர்வாகத் தடை அளவுக்கு மீறிய மற்றும் மனப்போக்கு சார்ந்ததாகும்.
அனுமதி பரிசீலனை மற்றும் வழங்கல்
காவல் கண்காணிப்பாளருக்கு முழுமையான சுய விருப்ப அதிகாரம் அளிப்பது இயற்கை நீதி முறைமையை மீறுகிறது.
Madras City Police Act, 1888
41. Power to regulate assemblies, meetings and processions in public places, etc.
(1) The Commissioner or, subject to his orders, any Police Officer above the rank of head-constable, may, from time to time, as occasion may require, direct the conduct of all assemblies, meetings and processions in public places; prescribe the routes by which, and the times at which, such processions may pass; keep order in public places and prevent obstructions on the occasion of such assemblies, meetings and processions, and in the neighbourhood of places of worship during the time of public worship and in any case when public places may be thronged or liable to be obstructed; and may licence and regulate or prohibit the use of music or of sound amplifiers in any area.
(2) Subject to the provisions of sub-sections (3) and (4), the Commissioner may, by order in writing, prohibit any assembly, meeting or procession if he considers such prohibition to be necessary for the preservation of the public peace or public safety: Provided that no order under this sub-section shall, without the sanction of the State Government, remain in force for more than fifteen days from the date on which such order takes effect.
(3) (a) When the order referred to in sub-section (2) is in force, any person who intends to convene or collect any assembly or meeting in any public place or to direct or promote any procession, shall make an application to the Commissioner for permission. The application shall be in such form and contain such particulars as may be specified by the Commissioner in this behalf and shall be made not less than five days prior to the date, on which the assembly or meeting is to be convened or collected or the procession is to be formed: Provided that the Commissioner may, for reasons to be recorded in writing, receive such application within five days prior to the date aforesaid.
(3) (b) On receipt of the application under clause (a), the Commissioner may, by order in writing served in the manner specified in sub-section (7), grant permission to convene or collect the assembly or meeting or to direct or promote the procession subject to such conditions as he may specify or refuse to grant such permission.
(4) Except in cases where immediate action is necessary for the preservation of the public peace or public safety no order refusing to grant permission shall be passed under clause (b) of sub-section (3) without giving the person concerned an opportunity of appearing before the Commissioner either in person or by pleader and showing cause against the order refusing to grant permission and the Commissioner shall record in writing the reasons for such order.
(5) The Commissioner may, by order in writing, depute one or more Police officers or other persons, to be present in any such assembly, meeting or procession, for the purpose of causing a report to be taken of the proceedings
(6) Any person who—
(a) opposes or fails to obey any order under sub-section (1), or
(b) contravenes the conditions of any licence under sub-section (1), or
(c) when the order referred to in sub-section (2) is in force, convenes or collects any assembly or meeting or directs or promotes any procession—
(i) without the permission of the Commissioner under clause (b) of sub-section (3), or (ii) in contravention of any of the conditions subject to which the permission was granted under that clause, shall be liable, on conviction, to a fine not exceeding one hundred rupees.
(7) The order referred to in clause (b) of sub-section (3) shall be served—
(a) by giving or tendering the order to the person concerned; or
b) if such person is not found, by leaving such order at his last known place of abode or business or by giving or tendering the same to some adult member or servant of his family; or
(c) if such person does not reside in the city and his address elsewhere is known to the Commissioner, by sending the same to him by post registered; or
(d) if none of the means aforesaid be available, by affixing the same in some conspicuous part of the place of abode or business of such person.
(8) Nothing in this section shall apply to any assembly or meeting of a purely religious character held in a recognized place of worship, any assembly or meeting gathered together purely for the purpose of taking part in sports, any procession on the occasion of any wedding, funeral or similar domestic occurrence, or of any religious ceremony, or to any public meeting held under any statutory or other express legal authority, or to public meetings or class of public meetings exempted for that purpose by the State Government by general or special order.
(9) For the purposes of this section—
(a) the words “assembly”, “meeting” and “procession” include any assembly, meeting or procession which is open to the public or to any class or portion of the public;
(b) a place in which an assembly or meeting is held may be a “public place” notwithstanding that it is held in a private place and notwithstanding that admission thereto may have been restricted by ticket or otherwise
JUDGMENT
1. Himatlal K.Shah Vs Commissioner of Police, Ahmedabad and another 1973 AIR 87
2. S.Rangarajan Vs P.Jagjivan Ram and others (1989) 2 Supreme Court Cases 574
3. Home secretary, Government of Tamil Nadu and others Vs Era. Selvam and another (2013) 3 MLJ 513
4. Order passed by the Hon’ble Division bench of Madras High Court in W.A. 1798 of 2013, dated 31.08.2013
5. Order passed by the Hon’ble High court of Madras in W.P.10067 of 2015 dated 08.04.2015.
6. Order passed by the Hon’ble High court of Madras in W.P.14568 of 2015 dated 28.05.2015.
7. Order passed by the Hon’ble High court of Madras in W.P.28707 of 2015 dated 15.09.2015.
8. Order passed by the Hon’ble High court of Madras in Crl.O.P.6933 of 2018 dated 12.03.2018.
9. Order passed by the Hon’ble High court of Madras in W.P.10067 of 2015 dated 08.04.2015.
10. Order passed by the Hon’ble High court of Madras in W.P.14526 of 2015 dated 14.05.2015
11. Order passed by the Hon’ble High court of Madras in W.P.3731 of 2019 dated 08.02.2019.
12. Order passed by the Hon’ble High court of Madras in W.P.7145 of 2019 dated 12.03.2019.
13. Order passed by the Hon’ble High court of Madras in W.P.18741of 2023 dated 27.01.2023.
14. Order passed by the Hon’ble High court of Madras in W.P.13453 of 2012 dated 19.07.2012.
* “Fiwªj / Äjkhd / mâf Mg¤J” v‹w msåL tiuaiwa‰wJ. Kiwp£L (appeal) eilKiw ïšyhjjhš ïJ ãÇî 14 (rk¤Jt«)-¡F ÉnuhjkhF«. (State of West Bengal v. Anwar Ali Sarkar, 1952)
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கடமைகள்
* கூட்டத்தில் பங்கேற்கும் எண்ணிக்கை, நேர வரம்பு (3 மணி நேரம்), வைப்பு பறிமுதல் போன்ற நிபந்தனைகள் கருத்துரைக்கும் உரிமையை குறைக்கும் விதமானவை.
* நேர வரம்பு விதிப்பது அரசியல் உரிமையின் உண்மையான பயனை மறுக்கிறது.
* நீதிமன்ற தீர்ப்பு இன்றி வைப்பு பறிமுதல் செய்வது பிரிவு 20(1)-க்கு எதிரானது.
நிகழ்ச்சிக் கால கடமைகள்
* நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியாளர்கள், விளக்குகள், கழிப்பறைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வது, அரசின் பொறுப்பை குடிமக்களின் மீது திணிக்கிறது. இந்த ஏற்பாடுகள் தற்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால்தான் செய்யப்படுகிறது.
* பொது பாதுகாப்பு அரசின் கடமை; குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு நிபந்தனையாக இது இருக்க முடியாது.
* இது பிரிவு 21-ல் உறுதி செய்யப்பட்ட மரியாதையுடனான வாழ்வு உரிமைக்கு எதிரானது.
நிகழ்ச்சி கண்காணிப்பு குழுக்கள்
* அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுக்கள் உருவாக்கப்படுவது வெளிப்படைத் தன்மையற்றதும் நியாயமற்றதுமாகும்.
* அடிப்படை உரிமைகளை பாதிக்கும் எந்தக் குழுவிலும் குடிமக்கள் அல்லது மக்களின் நலனில் அக்கறை கொண்ட உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும்.
* இல்லையெனில், அது இந்திய அரசமைப்பின் பிரிவு 14 மற்றும் “அதிகாரப் பிரிவினை” (Separation of Powers) என்ற அடிப்படைச் சிந்தனையை மீறுவதாகும்.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
* CCTV, ட்ரோன், சோதனைச் சாவடி போன்ற கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள், அமைதியான கூட்டங்களை காவல் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக மாற்றுகிறது.
* தொடர்ச்சியான கண்காணிப்பு அரசியல் கருத்துரைக்கும் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது.
* இது பிரிவு 19(1)(a) மற்றும் பிரிவு 21 (தனியுரிமை உரிமை – Puttaswamy v. Union of India, 2017)- க்கு எதிரானது.
நிகழ்ச்சி முடிந்த பின்பட்ட நடைமுறைகள்
* காவல் மற்றும் நிர்வாக அதிகாரிகள் தாமாகவே “விதிமீறல்” என்று தீர்மானித்து வைப்பு தொகையை பறிமுதல் செய்வது அரசியலமைப்புக்கு எதிரானது.
* சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றமே தண்டனை விதிக்க முடியும்.
* நிர்வாகம் தன்னிச்சையாக வைப்பு பறிமுதல் செய்வது பிரிவு 300-A (சொத்து உரிமை) மற்றும் பிரிவு 20(1)-க்கு எதிரானது.
இதர விதிகள்
* “அதிகாரிகள் தேவைக்கேற்ப நிபந்தனைகளை மாற்றலாம்” என்ற பிரிவு, கட்டுப்பாடற்ற நிர்வாக அதிகாரத்தை வழங்குகிறது.
* இத்தகைய வெளிச்சட்டமன்ற ((vague) அதிகாரம் Shreya Singhal v. Union of India, 2015 தீர்ப்பின்படி செல்லாது.
* அடிப்படை உரிமைகள் நிர்வாக உத்தரவுகளால் மீறப்பட முடியாது.
மொத்த அரசியலமைப்பு நிலைப்பாடு
* முழு SOP-யும் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை சுதந்திரங்களை நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஜனநாயகத்தின் சாரத்தை புறக்கணிக்கிறது.
* கருத்துரைக்கும் உரிமையும் அமைதியான கூட்டம் நடத்தும் உரிமையும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் ஆகும்.
* அத்தகைய உரிமைகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டுமானால் அது சட்டமூலம், சரியான அளவில், நியாயமான நோக்கத்துடன் மற்றும் பாகுபாடின்றி இருக்க வேண்டும்.
* இந்த SOP நிர்வாக உத்தரவாக வெளியிடப்பட்டுள்ளதால், இது அரசியலமைப்புச் சட்டத்தின் எல்லைக்குள் வராதது (ultra vires) மற்றும் தொடக்கத்திலிருந்தே செல்லாதது (void ab initio) ஆகும்.
தன்னிச்சை மற்றும் அளவுகோலற்றது:
* “ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு” என்ற பெயரில் அதிகாரிகளுக்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் அனுமதிப்பது விவேகமான, சமச்சீர் கட்டுப்பாடுகள் மட்டுமே.
* நோக்கம் “பொது அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்” என்ற வரம்புக்குள் மட்டுமே இருக்க வேண்டும்; நிர்வாக வசதிக்காக உரிமையை குறைக்க முடியாது.
பாகுபாடு மற்றும் சமத்துவ மீறல்
* 5,000 பேருக்கு மேல் / கீழ் என கூட்டங்களை பிரித்து, மத மற்றும் அரசு நிகழ்வுகளுக்கு விலக்கு அளிப்பது அரசியல் சட்டம் பிரிவு 14-ஐ மீறுகிறது.
* அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும். கூட்ட உரிமை எண்ணிக்கை அல்லது அரசியல் அடிப்படையில் வேறுபடுத்தப்படக் கூடாது.
“அங்கீகரிக்கப்பட்ட இடங்கள்” என்ற வரம்பு
* அங்கீகரிக்கப்பட்ட சில இடங்களிலேயே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனை Article 19(1)(b)–ஐ மீறுகிறது. அமைதியான கூட்டங்கள் அனைத்துப் பொதுநிலங்களிலும் நடத்த உரிமை உண்டு.
* சாலைகள், பூங்காக்கள், திறந்த நிலங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிபந்தனைகள் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட வேண்டும்; தடை விதிக்கக் கூடாது.
காப்புத் தொகை நிபந்தனை
* ரூபாய் 1,00,000 முதல் 20,00,000 வரை காப்புத் தொகை கோருவது அரசியல் சட்ட விரோதமானது மற்றும் சமத்துவ மீறல். இது பொருளாதார திறன் அடிப்படையில் குடிமக்களை பிரிக்கிறது.
* காப்புத் தொகைக்கு பதிலாக பொறுப்பு உறுதிமொழி கடிதம் போதுமானது.
முன்னே அனுமதி மனு காலவரையறை
* 10-30 நாட்களுக்கு முன்னரே மனு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை, உடனடி ஜனநாயக எதிர்வினையை தடை செய்கிறது.
* அவசரமான கூட்டங்களுக்கு 24 – 48 மணி நேரத்துக்குள் அனுமதி வழங்கும் சிறப்பு நடைமுறை ஏற்படுத்த வேண்டும்.
அதிகப்படியான தகவல் கேட்பது
* தன்னார்வலர்கள், வாகனங்கள், வழித்தடங்கள் போன்ற விவரங்கள் கேட்பது தேவையற்றது மற்றும் குடிமக்களின் தனியுரிமையை (Article 21) பாதிக்கிறது.
* தேவையான தகவல் — நிகழ்வு இடம், தேதி, மக்கள் எண்ணிக்கை போன்ற குறைந்த விவரங்களுக்குள் மட்டுப்படுத்த வேண்டும்.
பொறுப்பு உறுதிமொழி (Responsibility Affidavit)
* கூட்டம் நடக்கும் முன்பே ஏற்படும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏற்பாட்டாளரைப் பொறுப்பாக்குவது சட்டவிரோதம். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை.
* ஏற்பாட்டாளர்கள் ஒத்துழைக்கலாம்; ஆனால் எதிர்பாராத சம்பவங்களுக்கு முன்கூட்டியே குற்றம் சுமத்த முடியாது.
ரோடு ஷோ விதிகள்
* நிகழ்ச்சியின் பாதை, உரை நிகழ்த்த தடை, தடுப்பு அமைத்தல் போன்ற நிபந்தனைகள் அரசியல் உரிமையின் அடிப்படை சாரம்சமான பேச்சு சுதந்திரத்தை அழிக்கின்றன.
* முக்கிய போக்குவரத்து தடை இல்லாமல் குறுகிய உரைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.
பொறியாளர் சான்றிதழ்
* சிறிய மேடைகள் மற்றும் நிகழ்வுகளுக்கும் பொறியாளர் சான்றிதழ் கட்டாயம் என்கிறது; இது நடைமுறை சிரமம் மற்றும் செலவைக் கூட்டும்.
* பெரிய மேடைகள் அல்லது இயந்திர வசதி உள்ள மேடைகளுக்கு மட்டுமே கட்டாய சான்றிதழ். சிறிய நிகழ்வுகளுக்கு சுய அறிவிப்பு போதுமானது.
ஆபத்து வகைப்படுத்தல் (Risk Classification)
* “குறைந்த / மித / அதிக ஆபத்து” என காவல் துறைக்கு தன்னிச்சை அதிகாரம் அளிப்பது தவறான மற்றும் தவறாகப் பயன்படுத்தக்கூடியது.
* வகைப்படுத்தல் அடிப்படையில் இருக்க வேண்டும் (இடத்தின் தன்மை, முந்தைய பதிவுகள்) மற்றும் மேலதிக அதிகாரியிடம் முறையீடு செய்ய அனுமதி இருக்க வேண்டும்.
கொள்ளளவு மற்றும் நேர வரம்பு
* நிகழ்வை 50 சதவிகிதம் கொள்ளளவு மற்றும் 3 மணி நேரத்திற்குள் மட்டுப்படுத்துவது காரணமற்றது.
* நிலப்பரப்பு மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து சலுகை அளிக்க வேண்டும்; குழப்பம் ஏதும் இல்லாவிட்டால் நீட்டிப்பு அனுமதிக்க வேண்டும்.
தொழில்நுட்ப அனுமதிகள்
* மின்சாரம், ஒலி ஆகியவற்றுக்கான பல்வேறு அனுமதிகள் நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும்.
* Single Window System வழியாக ஒருங்கிணைந்த அனுமதி வழங்க வேண்டும்; சிறிய நிகழ்வுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் மற்றும் வசதிகள்
* 100 பேருக்கு 1 தன்னார்வலர், கழிப்பறை, CCTV, ஒளி ஆகிய நிபந்தனைகள் பொதுமக்கள் அமைப்புகளுக்கு நடைமுறை சிரமம்.
* இவை கட்டாயமல்ல; 10,000 பேருக்கு மேற்பட்ட பெரிய கூட்டங்களுக்கு மட்டுமே கட்டாயமாக்கலாம்.
சட்டம் ஒழுங்கு பொறுப்பு மாற்றம்
* அரசின் அடிப்படை கடமையான சட்ட ஒழுங்கை காப்பது தனியார் பொறுப்பாக மாற்றப்படுகிறது.
* காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகமே பிரதான பொறுப்பு வகிக்க வேண்டும்; ஏற்பாட்டாளர்கள் ஒத்துழைப்பு அளிக்கலாம்.
நேர வரம்பு (3 மணி)
* 3 மணி நேர வரம்பு காரணமற்றது; அரசியல் உரைகள் மற்றும் விவாதங்கள் அதைவிட நீளமானவை.
* சூரிய அஸ்தமனம் வரை அல்லது இரவு 10 மணி வரை அனுமதி; ஒலி மற்றும் பாதுகாப்பு நிபந்தனைகளுடன்.
* இரவு 10 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சிகளுமே நடத்தக்கூடாது என்பது பொருத்தமானது அல்ல. கலை நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்வுகள், நாடகம் ஆகியவற்றிற்கு இதில் விதிவிலக்கு அளிக்க வேண்டும்.
* அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தடை விதிக்கும் நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும்.
* ஆலை வாயில்கள், அலுவலக வாயில்களில் தொழிலாளர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற் கூட்டம் நடத்திட அனுமதி மறுக்கக் கூடாது.
பாதுகாப்பு குழு (Safety Committee)
* அனைத்து உறுப்பினர்களும் அரசு அதிகாரிகள் மட்டுமே; வெளிப்படைத்தன்மை இல்லை.
* குடிமக்கள் அமைப்புகள், வழக்கறிஞர் சங்கம், ஓய்வுபெற்ற நீதிபதி போன்றவர்களும் சேர்க்கப்பட வேண்டும்.
காவல் படை விகிதம்
* காவல் ஆட்கள் பற்றாக்குறை அடிப்படையில் அனுமதி மறுக்கப்படலாம். இது குடிமக்களின் உரிமையை தண்டிப்பது போலாகும்.
* காவல் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை; அதன் குறைபாடு காரணமாக அனுமதி மறுக்கக் கூடாது.
தன்னிச்சை அதிகாரம் (Discretionary Powers)
* “ஏதேனும் பிற நிபந்தனை விதிக்கலாம்” என்ற வார்த்தை வரம்பற்ற அதிகாரம் அளிக்கிறது.
* விதிக்கக்கூடிய நிபந்தனைகள் தெளிவாக பட்டியலிடப்பட வேண்டும்; அதற்கு வெளியே வேறு நிபந்தனை விதிக்க முடியாது.
நிகழ்வுக்குப் பிந்தைய காவல் அறிக்கை
* காவல் துறை பிந்தைய அறிக்கையில் கலந்து கொண்டவர்களின் விவரங்களைப் பதிவு செய்வது அச்சச்சூழல் (chilling effect) உருவாக்கும்.
* உண்மையான சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே அறிக்கை தயாரிக்க வேண்டும்; 72 மணி நேரத்திற்குள் தகவல் அளிக்க வேண்டும்.
காப்புத் தொகை பறிமுதல் மற்றும் வழக்கு
* கேட்பு இல்லாமல் தானாகவே காப்புத் தொகை பறிமுதல் செய்தல், TNPPDL சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்தல் இயற்கை நீதி கோட்பாட்டிற்கு Principles of Natural Justice) விரோதம்.
* காப்புத் தொகை பறிமுதல் அல்லது நடவடிக்கைக்கு முன் காரணம் தெரிவித்து நோட்டீஸ் மற்றும் கேட்பு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
திருப்பி வழங்கல் தாமதம்
* திருப்பி வழங்குவதற்கான முடிவை காவல் / வருவாய் அதிகாரியின் விருப்பத்திற்கே விட்டுவிடுவது தவறானது.
* எந்த விதிமீறலும் இல்லாவிட்டால் 7 நாட்களுக்குள் தானாக திருப்பி வழங்க வேண்டும்; காரணம் கூறிய எழுத்து உத்தரவு இல்லாவிட்டால் தாமதிக்கக் கூடாது.
தங்களன்புள்ள,
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







