இரங்கல்

இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவு! சிபிஐ(எம்) இரங்கல் !!

Statenment bharathiraja

இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த பாரதிராஜா அழுத்தமான தடங்களை பதித்தவர். வேதம் புதிது, கருத்தம்மா, புதுமைப்பெண் உட்பட முற்போக்கான திரை ஆக்கங்களை தந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. கிராமிய மண்வாசனை மணத்தை திரையில் கொண்டுவந்தவர். தன்னுடைய இளம் வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர். ஆழமான சமூக அக்கறையுடன் கூடிய திரைப்படங்களை தந்த அவரது மறைவு  இந்திய திரையுலகிற்கு பெரும் இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது இணையர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெ.சண்முகம்
மாநில செயலாளர்

குறிப்பு : இன்று (10.06.2026) குற்றாலத்தில் நடைபெற்ற கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply