அரசியல் தமைமைக்குழு

மக்களின் போராட்டக்களமாகவே ஜந்தர் மந்தர் வீதி திகழும்! மோடி அரசின் முயற்சிகள் முறியடிக்கப்படும்: சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு

14.10.26

ஜந்தர் மந்தருக்கு வழங்கப் பட்டிருந்த ‘நியமிக்கப்பட்ட போராட்டதளம்’ என்ற அந்தஸ்தை, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தூண்டுதலின் பேரில் திரும்பப் பெற்ற முடிவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவன்மையாகக் கண்டித்துள்ளது.

அமைதியான போராட்ட உரிமைக்கு எதிரான செயல்இது மிகவும் ஜனநாயக விரோதமான, எதேச்சதிகாரமான நடவடிக்கையாகும் என்றும், மாற்றுக்கருத்தின் மீது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு அதிகரித்து வரும் சகிப்பின்மையையும், அமைதியான முறையில் போராடுவதற்கான அரசமைப்புச் சட்ட உரிமையின் மீதான அலட்சியத்தையும் இது பிரதிபலிக்கிறது என்றும் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துள்ளது. ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதை தில்லி காவல்துறை ஏற்கெனவே வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. இதுவரை தன்னிச்சையான காவல்துறை கட்டுப்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நடவடிக்கை, இப்போது இந்த முடிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான பொதுமக்களின் கோபத்தை அடக்குவதற்கான பாஜக அரசின் மற்றொரு முயற்சியே இதுவாகும்.

 
மாற்று இடங்கள் ஈடல்ல!

மாற்று இடங்களாக முன்மொழியப்பட்டுள்ள ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் சிபிடி மைதானம் ஆகியவை ஜந்தர் மந்தருக்கு ஒருபோதும் ஈடல்ல. அரசியல் அதிகாரத்தின் மையங்களிலிருந்து பொதுப் போராட்டங்களைத் தொலைவில் தள்ளி, ஜந்தர் மந்தரை ஒரு முக்கியமான ஜனநாயக வெளிப்பாட்டுத் தளமாக மாற்றிய பார்வைக்குட்பட்ட தன்மை, அணுகல் எளிமை மற்றும் நெருக்கம் ஆகியவற்றை இல்லாமல் செய்வதே இதன் நோக்கம். இது பொதுமாற்றுக்கருத்தைக் கண்ணுக்குப் புலப்படாததாகவும், அரசியல் ரீதியாகப் பயனற்றதாகவும் ஆக்கும் முயற்சியாகும். போராட்டத் தளமாக ஜந்தர் மந்தர் தொடரும் ஜந்தர் மந்தர் தொடர்ந்து பொது மக்களின் போராட்டத் தளமாக இருக்கும் என்றும், இதைத் தடுக்கும் அனைத்து முயற்சிகளும் எதிர்த்து முறியடிக்கப்படும்.

Leave a Reply