ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைமத்தியக் குழு

வயநாடு நிவாரண நிதி: சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ரூ. 35,97,611/- அனுப்பிவைப்பு!

22222222222 Copy

கேரள மாநிலம், வயநாட்டில் எதிர்பாராமல் பெய்த அதிகனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் 31.07.2024 அன்று கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டது.

கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான கேரள மக்களுக்கு உதவிட கட்சியின் மத்தியக்குழு நாடு முழுவதும் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென அறைகூவல் விடுத்தது.

அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள், பொதுமக்கள் வழங்கிய ரூ.35,97,611/-ஐ இன்று (05.09.2024) கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மத்தியக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன்,மாநில செயலாளர்