பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சமூக பாரபட்சங்களும் இல்லாத ஒரு புதிய சமத்துவ சமூகம் மலர்வதற்கான ஓர் புதிய பாதையை அமைக்கவும் அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகர்க்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த புத்தாண்டில் சபதம் ஏற்போம்.
இருள் போல சூழும் சாதிய, மத மோதல்கள், பிற்போக்குத்தனமான பாலின பாகுபாடு, மூடநம்பிக்கைகள், சீரழியும் முதலாளித்துவத்தின் வெளிப்பாடான ஊழல் மற்றும் பெரும் கொள்ளை உள்ளிட்ட அனைத்து கேடுகளிலிருந்தும் சமூகத்தை விடுவித்து, மானுடம் போற்றும் உயர்வானதொரு சமூகத்தை கட்டி எழுப்புவதற்கான சமரசமற்ற போராட்டங்களை அரசியல் சமூக பொருளாதார தளங்களில் நடத்திக் கொண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இத்தகைய முயற்சிகளை புத்தாண்டிலும் வரும் காலங்களிலும் மேலும் முனைப்போடு தொடரும்.
கார்ப்பரேட் இந்துத்துவா கொள்கைகளை அமலாக்கி, மக்களைப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை உள்ளிட்ட விழுமியங்களை சிதைக்கும் ஏதேச்சாதிகார ஆட்சியையும் தோற்கடித்து நமது நாட்டின் பன்மைத்துவத்தை பாதுகாக்கும் போராட்டத்தை வலுப்படுத்துவோம் எனும் அறைகூவலை முன்வைப்பதோடு, அத்தகைய போராட்டத்தில் இணைந்திருக்கும் தொழிலாளர்கள், உழைப்பாளி மக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், முற்போக்காளர்கள், அறிவுத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்