மாநில செயற்குழு

ஆசிரியர் இயக்கத்தின் முன்னோடி எல்.கோபாலகிருஷ்ணன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்

Erangal

ஆசிரியர் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவான தோழர் எல். கோபாலகிருஷ்ணன் தனது 102வது வயதில் காலமாகியுள்ளார். வா. இராமுண்ணி போன்ற முன்னோடித் தலைவர்களுடன் இணைந்து செயலாற்றியவர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர்.  சங்கப் பணிக்காக அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொண்டவர். ஆசிரியர்களின் போராட்டத்தில் தலைமையேற்று சிறை சென்றவர். அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டிருப்பது சமூகத்தின் பால் அவர் கொண்டுள்ள நேசத்தின் அடையாளமாகும். அவரின் மறைவு ஆசிரியர் இயக்கங்களுக்கும், முற்போக்கு சக்திகளுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். 

அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு தனது நெஞ்சார்ந்த அஞ்சலியையும், அவரது மகள் விஜயலெட்சுமி அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

(பெ. சண்முகம்)

மாநில செயலாளர்