தீர்மானங்கள்

மாநகராட்சி, நகராட்சியுடன்கிராமப்புற பஞ்சாயத்துகளை இணைப்பு நடவடிக்கைகளை மக்கள் விருப்பத்திற்கு விரோதமாக மக்கள் கருத்தரியாமல் அரசு மேற்கொள்ள கூடாது!

4 Cpim

தீர்மானம் – 4

தமிழ்நாடு அரசு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை விரிவாக்கம் செய்வதன் மூலமாகத்தான் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சியுடன் கிராமப்புற பஞ்சாயத்துகளை இணைப்பதும் மாநகராட்சி உடன் பேரூராட்சி நகராட்சி கிராமப்புற ஊராட்சிகளை இணைப்பதும் கிராமப்புற ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்றுவதும் என்று தமிழ்நாடு அரசு கருத்துருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகளை வைத்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் அவர்களிடம் மனு கொடுத்து மக்களின் கருத்தறிய கிராம சபை கூட்டங்கள் நடத்தி மக்களின் கருத்துக்களை கேட்டு அதற்கு பின்பு தான் கிராமப்புற பஞ்சாயத்துகளை நகராட்சியுடன் இணைப்பதும் நகராட்சிகளை மாநகராட்சி இணைப்பது சம்பந்தமாக முடிவு எடுக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது அப்பொழுது உள்ளாட்சி துறை செயலாளர் மக்கள் கருத்தறியாமல் நாங்கள் இணைக்க மாட்டோம் என்று ஏற்கனவே உறுதியளித்துள்ளார். தற்போது இந்த அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் மக்கள் விருப்பத்திற்கு விரோதமாக மக்கள் கருத்தரியாமல் இந்த இணைப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மேலும் கிராமப்புற பஞ்சாயத்துகளை நகர்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்க கூடாது என்று சொல்லி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். மேலும் கிராமப்புற பஞ்சாயத்துகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைத்தால் தான் அடிப்படை தேவைகளையும் வளர்ச்சியும் கிடைக்கும் என்று கூறுவது பொருத்தம் உடையதாக இல்லை. கிராமப்புற ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு பணியாளர்கள் என்பது கடந்த 25 வருட காலமாகவே எடுக்கப்படவில்லை. குறிப்பாக தூய்மை பணியாளர் நியமனம் என்பது கிராமப்புற ஊராட்சிகளில் இல்லை பத்தாயிரம் வாக்காளர்களை கொண்ட கிராமப்புற ஊராட்சியில் 10க்கும் குறைவாக தூய்மை பணியாளர்கள் தான் பணியாற்றுகிறார்கள் ‌ எனவே புதிய பணியாளர்கள் நியமனம் செய்து வளர்ச்சி உருவாக்க வேண்டுமே தவிர இதனை காரணம் சொல்லி நகர் புற உள்ளாட்சிகளுடன் இணைப்பதால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும், மற்றும் இலவச வீடுகட்டும் திட்டம் பல்வேறு நலத்திட்டங்கள் பறிபோகும். அரசாணை எண் 152, 139 மூலம் தூய்மை பணியாளர் அவுட்சோர்சிங் செய்யப்படுவது, பணி நியமனங்கள் சுரண்டலை அதிகப்படுத்துவதாக உள்ளது. மேலும் குடியிருப்புகளுடைய சொத்து வரி என்பதும் கடுமையாக உயரும் கிராமப்புற உள்ளாட்சிகளில் இருப்பவர்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சிக்கும் சொத்துவரி என்பது மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது வருவாய் அதிகப்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக மட்டுமே இணைப்பது என்பது பொருத்தம் உடையதாக இருக்காது நகர்ப்புற உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட வரி உயர்வு என்பது இப்பொழுது கடுமையாக வருடந்தோறும் உயர்ந்து கொண்டு வருகிறது.


இந்நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளாட்சி மன்றங்களை வார்டு மறுவரை செய்ய முடிவுசெய்துள்ளது. இந்த வார்டு மறுசீரமைப்பு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அலுவலர்கள் மூலம் மட்டுமே செய்யப்பட்டது பெயரளவில் கருத்து கேட்பது நடத்தி செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடம் வார்டுகள் மறுவறை செய்யும்பொழுது அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களை அமைத்து செய்யப்பட வேண்டும் இதுவே ஜனநாயக ரீதியாக இருக்கும் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வார்டு மறுவறை செய்யும் போது மேற்கண்ட அடிப்படையில் செய்ய வேண்டும் என்று மாநாடு கோருகிறது.

Leave a Reply