அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிமுறைகளை அனைவரும் ஒன்றுபட்டு நின்று முறியடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளின் வரைவு, மாநிலங்களில் இயங்கி வரும் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக மாநில அரசாங்கங்களுக்கு இருந்து வரும் உரிமைகள் மீது நேரடியான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. மாநிலங்களில் உள்ள ஆளுநர்களே துணை வேந்தர்களை நியமித்திடுவதற்கு வகை செய்யும் விதத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் தன்னிச்சையான விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் இவ்வாறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
இந்தத் திருத்தங்கள் ஏற்பட்டால், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசாங்கங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாது ஒழிக்கப்பட்டுவிடும். இந்தத் திருத்தத்தின் மூலமாக, ஒன்றிய அரசாங்கம், தாங்கள் விரும்பும் எவரையும், தங்களுக்குத் தலையாட்டும் ஆளுநர்கள் / வேந்தர்கள் மூலமாக, மாநிலங்களில் செயல்படும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களாக நியமித்திட முடியும்.
இந்த வரைவு விதிகள், கல்வி பொதுப் பட்டியலில் உள்ள ஒன்று என்கிற அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாட்டை மீறுகிறது. பாஜக அல்லாத மாநில அரசாங்கங்கள் உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் இத்தகைய ஆபத்தான திருத்தத்தை ஒன்றுபட்டு எதிர்த்திட முன்வர வேண்டும். இந்தத் திருத்தம் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்தி அறிக்கை > மாநில உரிமைகளைப் பறித்து ஆர்எஸ்எஸ் ஊடுருவலுக்கு வழிவகுக்கும் யுஜிசி விதிகள்; ஒன்றுபட்டு முறியடிக்க அரசியல் தலைமைக்குழு அறைகூவல்
மாநில உரிமைகளைப் பறித்து ஆர்எஸ்எஸ் ஊடுருவலுக்கு வழிவகுக்கும் யுஜிசி விதிகள்; ஒன்றுபட்டு முறியடிக்க அரசியல் தலைமைக்குழு அறைகூவல்
posted on