ஜம்மு – காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. பயங்கரவாதிகளால், அப்பாவிகள் 28 பேர் கொல்லப்பட்டுள்ள துயரமான நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டு மக்களோடு ஒன்றுபட்டு நிற்கிறது என்றும் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. “ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 28 சுற்றுலாப் பயணிகள் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் தாக்குதலில் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்த கயவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒன்றிய அரசின் கீழ் உள்ளனர். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். குற்றத்தைச் செய்தவர்கள் நாட்டின் எதிரிகள், குறிப்பாக காஷ்மீர் மக்களின் எதிரிகள். பாதுகாப்பின்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் நெரிசலான சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு இல்லாதது உட்பட, இந்த தாக்குதலின் அனைத்துக் கோணங்களையும் விசாரிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும். இந்தத் துயரமான நேரத்தில், அதிதீவிர அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக- நாட்டு மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்டு நிற்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > தீர்மானங்கள் > மாநில செயற்குழு > காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் நாட்டின் எதிரிகள்!சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம்!
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் நாட்டின் எதிரிகள்!சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம்!
posted on
