ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர், 25 புத்தகங்கள் மீதான தடை எதேச்சாதிகாரத்தின் மற்றொரு வெளிப்பாடாகவும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான ஒரு வெட்கக்கேடான தாக்குதலாகவும் உள்ளது.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் பிரதிநிதியாகச் செயல்படும் துணைநிலை ஆளுநர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மூர்க்கத்தனமாக பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
‘பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு’ உதவுவதாகக் கூறி, இந்தப் புத்தகங்களுக்கு தடை விதித்துள்ளார். உண்மையில், இவை காஷ்மீரின் வரலாற்றையும் அதன் தற்போதைய பிரச்சனைகளின் வேர்களையும் ஆராயும் நூல்களாகும்.
இந்த 25 புத்தகங்களும் ஏ.ஜி.நூரணி, அனுராதா பாசின், அருந்ததி ராய் மற்றும் பல பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளாகும். இந்தப் புத்தகங்கள் மீதான தடையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.
ஜம்மு – காஷ்மீ ருக்கான மாநில அந்தஸ்து, முழு ஜனநாயக உரிமைகளுடன், தாமதமின்றி மீட்டெடுக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு முழு நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மட்டுமே ஜம்மு – காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்தி அறிக்கை > அரசியல் தமைமைக்குழு > 25 புத்தகங்களுக்குத் தடை விதித்த காஷ்மீர் ஆளுநரின் எதேச்சதிகாரத்திற்கு கண்டனம்; உடனடியாக தடையை ரத்து செய்யவும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்
25 புத்தகங்களுக்குத் தடை விதித்த காஷ்மீர் ஆளுநரின் எதேச்சதிகாரத்திற்கு கண்டனம்; உடனடியாக தடையை ரத்து செய்யவும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்
8 August 2025455 views
posted on







