அரசியல் தமைமைக்குழு

‘காசி விஸ்வநாத் காரிடார்’ சாலை விரிவாக்கம் மசூதிகளை கையகப்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கண்டனம்!

KU

காசி விஸ்வநாத் காரிடார் எனும் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக வாரணாசியின் தல்மண்டி பகுதி யில் உள்ள மசூதிகள் மற்றும் கடைகளை கையகப்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதச்சார்பின்மை யையும் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது கண்டனம். குறைபாடு கள் நிறைந்த இந்த தீர்ப்பை நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்சநீதிமன்றம் தலையிட்டு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

வழக்கின் பின்னணியும் நீதிமன்றத் தீர்ப்பும் :

வாரணாசி தல்மண்டி சந்தைப் பகுதியில் பல தலைமுறைகளாக வாடகைக்குக் கடைகள் நடத்தி வரும் சையத் ரஷீத் அலி உள்ளிட்ட 6 வியாபாரிகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். தல்மண்டி சாலை விரிவாக்கம் மற்றும் அழகுபடுத்தும் திட்டத்திற் காக தங்களை சட்டவிரோதமாகக் கடைகளில் இருந்து அப்புறப் படுத்த முற்படுவதாகவும், 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பிருந்து செயல்பட்டு வரும் அஞ்சுமன் இன்டெஜாமியா உள்ளிட்ட 6 பழமையான மசூதிகளை இடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் மனு தாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை ஜூலை 2, 2026 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் அருண் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, பொது நலனுக்காகவோ அல்லது சாலை போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற் காகவோ வழிபாட்டுத் தலங்களை அரசு கையகப்படுத்துவதை 1991 ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் தடுக்கவில்லை என்று குறிப்பிட்டது. மேலும், மனுதாரர்கள் வெறும் வாடகைதாரர்கள் மட்டுமே என்ப தால் நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் அவர்களுக்குப் போதிய சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு தனது கண்டனம்!

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக அச்சுறுத்துகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டின் வழி பாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு நீதிமன்றம் அளித்துள்ள விளக்கம் முற்றிலும் தவறானது. பொது நோக்கம் என்ற பெயரில் மசூதிகளை கையகப்படுத்த இந்த சட்டம் தடையாக இருக்காது என்று கூறுவது, மதச்சார்பின்மையின் பாதுகாப்பு அரணாக உள்ள இந்தச் சட்டத்தையே அர்த்தமற்ற தாக்கிவிடும். ஒரு மசூதி சாலைக்காக இடிக்கப்படும் போது, அதன் மதத்தன்மை முற்றிலும் அழிக்கப்படுகிறது என்றும், இது நிலம் கையகப்படுத்துதல் என்ற பெயரில் நடத்தப்படும் மறைமுக மதமாற்றமே ஆகும் என்றும், இதைத் தடுப்பதற்காகவே 1991 சட்டம் இயற்றப்பட்டது.

வாழ்வாதார உரிமைகள் புறக்கணிப்பு

நிலம் கையகப்படுத்தப்படும் போது வாடகைதாரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று நீதி மன்றம் மிகச் சாதாரணமாகக் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தல்மண்டி பகுதியில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் ஆவர். அவர்கள் தலைமுறை தலைமுறையாக அங்கு வாடகை ஒப்பந்தங்கள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தி முறைப்படி தொழில் செய்து வருகின்றனர்.

சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, 50 சதவீத குடும்பங்கள் அங்கேயே வசிக்கின்றன; 45 சதவீத குடும்பங்கள் வாழ்வாதாத்திற்காக இந்தச் சந்தையை மட்டுமே நம்பியுள்ளன. இத்தகைய சூழலில், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21 வழங்கும் வாழ் வாதாரத்திற்கான உரிமையை நீதிமன்றம் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது.

சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்

இத்தீர்ப்பு, போஜ்சாலா மசூதி தொடர்பான வழக்கில் அளித்த தீர்ப்பின் தொடர்ச்சியாகவும், தற்போது நாட்டில் நிலவி வரும் மசூதி விவகாரங்களின் பின் னணியிலும் அமைந்துள்ளது. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்குச் சேவை செய்யும் வகையில் சிறுபான்மை யினர் மீது நடத்தப்படும் திட்ட மிட்ட தாக்குதலின் ஒரு பகுதியே இதுவாகும். காசி விஸ்வநாதர் கோவிலுக்கு மிக அருகில், அதாவது வெறும் 100 மீட்டர் தொலைவில் உள்ள, மிகக் குறைவான இடப்பெயர்ச்சியைக் கோரும் சோனார் கலி போன்ற மாற்றுப் பகுதிகளை மேம்படுத்தியிருக்க முடியும். கோவில் வளாகத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள தல்மண்டி என்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியைத் திட்டமிட்டு அரசு தேர்ந்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் முறையான மறுவாழ்வு மற்றும் மீள்குடி யேற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்று 2013 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. இந்த சட்டப்பூர்வ கடமைகளை மாநில அரசு மீறியுள்ளதை நீதிமன்றம் தட்டிக்கேட்கத் தவறிவிட்டது என்றும், எனவே உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்தத் தீர்ப்பை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.

Leave a Reply